கோட்டக்குப்பம் ஈத் பெருநாள் புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பு -1


Advertisements

கோட்டக்குப்பம் பகுதியில் போலீஸ் புகார் பெட்டி


கோட்டக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கிராமங்களில், போலீசார் மூலம் புகார் பெட்டி அமைக்கப்பட்டது.கோட்டக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில், கிராமங்களில் போலீசார் மூலம் புகார் பெட்டிகள் அமைக்க, விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டது.இதன் துவக்கமாக, பெரிய முதலியார்சாவடி நியாய விலை கடையில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியை கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமை தாங்கி நேற்று திறந்து வைத்தார். விழாவில், இன்ஸ்பெக்டர் திருமணி, சப் இன்ஸ்பெக்டர் அருள்செல்வன், தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதேபோல், சின்ன முதலியார்சாவடி, கோட்டக்குப்பம், சின்ன கோட்டக்குப்பம், கீழ் புத்துப்பட்டு, மாத்துார், வாழப்பட்டாம்பாளையம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டிகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.இந்த புகார் பெட்டியில், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஸ்டேஷனின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டுள்ளன. புகார் பெட்டிகளை கண்காணிக்க மட்டும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், புகார் பெட்டியில் வரும் மனுக்கள் குறித்து உயரதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் பயணத்திற்கு மானியத்தை உயர்த்தியதற்கு நன்றி : முதல்வருடன் கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் சந்திப்பு


 

தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனி சாமியை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான அ. தமிழ்மகன் உசேன், விழுப்புரம் வடக்கு மாவட்டம், கோட்டக்குப்பம் ஜமாத் நிர்வாகிகளான ஜமாத் தலைவர் அப்துல் அமீது, முத்தவல்லி பக்ருதீன் பாரூக், துணைச் செயலாளர் கே. நசீர், ஜமாத்தார் முகம்மது சேட், டி. அமீன், எம்.ஜி.ஆர். இஸ்மாயில், லியாகத் அலி, கமால்பாய் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்யும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு முதல் அம்மாவின் தமிழக அரசு 6 கோடி ரூபாய் மானியத் தொகையாக வழங்க உத்தரவிட்டமைக்காக, பொன்னாடை போர்த்தி பூச்செண்டு வழங்கி கோட்டக்குப்பம் ஜமாத்தார்கள் சார்பாக தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: