கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்களி ன் ஆணைக்கிணங்க விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் டி வி சீனிவாசக்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும்,வானூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், கண்டமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், இக்கூட்டத்திற்கு வட்டார தலைவர்கள் காசிநாதன் ஏழுமலை ராதா மற்றும் கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாரூக் ஆகியோர் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை டி. ராமமூர்த்தி கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் பாபு சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய தலைவர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு கோட்டகுப்பம் நகர மன்ற உறுப்பினர் சாதிக் பாஷா,சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் முபாரக், கோட்டகுப்பம் நகர துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ்,பொதுச் செயலாளர் சாகுல், நஜீர் பாஷா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இஸ்மத் அலி,ஓ பி சி நகர தலைவர் எம் டி அன்சாரி,வானூர் வட்டார துணைத் தலைவர் அகமதுல்லா, நகர செயலாளர் அகமதுல்லாஹ்,சுந்தரமூர்த்தி,சிறுபான்மை பிரிவு தலைவர் ஆதார் பாஷா , இளைஞர் காங்கிரஸ் நகர செயலாளர் அக்பர், பைசுர் ரஹ்மான்,செயற்குழு உறுப்பினர் முகமது இக்பால் ஆகியோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்து, நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.