நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை


 

நிலத்திலிருந்து விவசாயம் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளையாகும்.

நிலத்தடி நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்தக் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் கட்டண முறை நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசின் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, தொழிற்சாலைகள், புட்டிகளில் குடிநீரை அடைக்கும் குடிசைத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை நிலத்தடி நீரை எடுப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறுத் தேவைகளுக்காக ஓர் அங்குலத்துக்கும் குறையாத விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கன மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்கள், ஒரு கன மீட்டருக்கு ரூ.2 வரை கட்டணம் செலுத்த வேண்டும்; வீடுகளும் மத்திய அரசிடம் மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டுமாம்.

இனி வரும் காலங்களில் நீருக்காக மூன்றாவது உலகப் போர் மூளும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்படும் சூழலில் நிலத்தடி நீரை பாதுகாப்பது அவசியமானது. அதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வகை நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவை. தொழிற்சாலை உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதும் கூட ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.

ஆனால், வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். அவ்வாறு இருக்கும் போது குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும்.

நிலத்தடி நீருக்கு கட்டணம் அறிவித்துள்ள மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையம், இந்த அறிவிப்பால் மக்கள் கோபம் அடைவார்கள் என்பதை உணர்ந்து கொண்டு முன்கூட்டியே இரு விளக்கங்களை அளித்திருக்கிறது. முதலாவது நிலத்தடி நீருக்காக வசூலிக்கப்படும் கட்டணம் என்பது அதற்கான விலை அல்ல; மாறாக நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கான செலவு என்பதாகும்.

இரண்டாவது வேளாண் தேவைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்பதாகும். இரண்டுமே மக்களை ஏமாற்றுவதற்காக அளிக்கப்படும் விளக்கம் ஆகும். நிலத்தடி நீருக்கான கட்டணம் என்ன பெயரில் வசூலிக்கப்பட்டாலும் அது அதற்கான விலை தான்.

ஹிட்லருக்கு புத்தர் என்று பெயர் மாற்றம் செய்தால், அவர் எப்படி ஆசைகளைத் துறந்து, அமைதியை நேசிப்பவர் ஆகி விட மாட்டாரோ, அதேபோல் தான் பரமாரிப்புச் செலவு என்று கூறுவதாலேயே அது நிலத்தடி நீருக்கான கட்டணம் இல்லாமல் போய்விடாது.

அடுத்ததாக, விவசாயத்திற்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவிப்பை நினைத்து விவசாயிகளும், மற்றவர்களும் நிம்மதி அடைய முடியாது. இது ஓர் ஏமாற்று வேலை ஆகும். வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு கட்டணம் இல்லை என்பது தற்காலிக சலுகை மட்டுமே.

அடுத்த சில ஆண்டுகளில் வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும். நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது என்பது 1987 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட தேசிய தண்ணீர் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

இதற்காக 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய வரைவு தண்ணீர் கொள்கையில், விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும், தண்ணீர் வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும், தண்ணீர் விநியோகத்தை முழுக்க முழுக்க தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தண்ணீர் கொள்கையை மத்திய அரசு இறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்ற தேசிய தண்ணீர் வார விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிலத்தடி நீர் இலவசமாகக் கிடைப்பதால்தான், அதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. நீர் இலவசப் பொருளல்ல. அது ஒரு வணிகப் பொருள். உரிய விலை கொடுத்துத்தான் நிலத்தடி நீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை நாட்டுடைமையாக்கி, அதை தனியார் வசமோ அல்லது தனியாரோடு கூட்டுச் சேர்ந்தோ நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிலத்தடி நீர் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட, தேசிய நீர் கொள்கை-2012 வடிவமைக்கப்படுகிறது என்று கூறினார்.

2012 தேசிய நீர் கொள்கை, அதுதொடர்பான அப்போதைய பிரதமரின் வார்த்தைகளுக்குத் தான் இப்போது செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு நிலத்தடி நீர்த்தேவை 2,53,00,000 கோடி லிட்டர் ஆகும். இதில் 10 விழுக்காடு, அதாவது 25,00,000 கோடி லிட்டர் மட்டுமே தொழிற்சாலைகள் மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்கானது ஆகும். மீதமுள்ள 2,28,00,000 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வேளாண் பயன்பாட்டுக்கானது ஆகும்.

நிலத்தடி நீரை நிர்வகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் போது, 90% நிலத்தடி நீர் இலவசமாக பயன்படுத்தப்படுவதை தனியார் நிறுவனங்கள் அனுமதிக்காது. அப்போது நிச்சயமாக வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் ஆபத்தை இப்போதே தடுக்க வேண்டும்.

எனவே, குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாடு, வேளாண் பயன்பாடு ஆகியவற்றுக்கான நிலத்தடி நீருக்கு எக்காலத்திலும், எந்த பெயரிலும் கட்டணம் வசூலிக்கப்படாது என அரசு உறுதியளிக்க வேண்டும். 2012 ஆம் ஆண்டின் தேசிய தண்ணீர் கொள்கையில் இந்த வாக்குறுதியை அரசு சேர்க்க வேண்டும்.

Advertisements

கோட்டகுப்பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில், அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். கோட்டக்குப்பம் எம்ஜி ரோட்டில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடை, பழக்கடை, இனிப்பு கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை, பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று ஒரே நாளில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செ்யயப்பட்டன. இனிமேல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.இதே போல் சின்னமுதலியார்சாவடி, சின்ன கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் அணணாதுரை தெரிவித்தார்

PIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்


===========================

வருகின்ற நவம்பர் 26 முதல் 28, 2018 வரை புதுச்சேரி காலப்பட்டு PIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம் நடைப்பெற உள்ளது.

_குழந்தைகள் மருத்துவம்_

• இருதயநோய்

• பெருமூளை வாதம்

• சிறிய தலை

• இரத்த சோகை

• சிரங்கு சொறி

_பொது மருத்துவம்_

• பக்கவாதம்

• வயிற்று நீர்க்கோர்வை

• இருதயநோய்

• நடுக்குவாதம்

• காச நோய்

_பொது அறுவை சிகிச்சை_

• தைராய்டு

• குடல் வால் இரக்கம்

• விரைவாதம்

• சிறுக்கட்டிகள்

• இரத்த குழாய் வியாதிகள்

• வயிறு வீக்கம்

• ஆறாத புண்

_மகப்பேறு மருத்துவ துறை_

• மார்பகத்தில் சிறுகட்டி

• அதிக வெள்ளைப்படுதல்

• அதிக ரத்தப் போக்கு

• கருப்பையில் கட்டி

• தாம்பத்திய உறவின்பின் ரத்த போக்கு

இந்த சிறப்பு அறுவை சிகிச்சை குறித்த சந்தேகங்களுக்கு உறிய விளக்கம் பெற, கோட்டக்குப்பத்தில் நாளை 23ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கிஸ்வா PIMS முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு: 98437 26436, 99433 49990

கஜா புயல் கரையை கடந்தது


கஜா புயல் கரையை கடந்தது

தீவிர புயலாக இருந்த கஜா, வலுவிழந்து புயல் நிலைக்கு திரும்பியுள்ளது. வலு குறைந்தாலும் மணிக்கு அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசகிறது

கோட்டகுப்பதில் அதிகம் பாதிப்பு இல்லை

#Cyclone_Gaja

புதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது! #Cyclone_Gaja


புதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது! #Cyclone_Gaja

கஜா புயல் மிகக் கடுமையாக இருக்கும்; சென்னை, கடலூரில் காற்றுடன் மிகக் கனமழை


தமிழகத்தை  நோக்கி வரும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும், வரும் 15-ம் தேதி கடலூர், புதுச்சேரி பகுதியில் கரையைக் கடக்கும் போது காற்றுடன் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர இருக்கும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும். மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஜா புயல் 13.5 வடக்கு அட்சரேகையில் இருக்கிறது. இது மேலும் மேற்கு வடமேற்காக நகர்ந்து வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் நாகை முதல் சென்னை வரை அல்லது புதுச்சேரி அல்லது கடலூர் பகுதிக்குத் தள்ளப்படும். ஆனால், எந்த இடத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று உறுதியாக இப்போது கூற முடியாது. மேற்கு, தென்மேற்காகப் புயல் நகரும்போது வேகமாக நகரும். ஆதலால், 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடக்கும்.

பிரதீப் ஜான்பிரதீப் ஜான்

 

கஜா புயல் எவ்வளவு வலிமையானது?

கடந்த 40 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தமிழகக் கடற்கரையை கடந்த புயலின் அழுத்தம் குறித்த விவரங்களைத் தந்துள்ளேன்.

1. 1978-ம் ஆண்டு இலங்கை புயல் 953 எம்.பி.(பிரஷர்)

2. 2000—ம் ஆண்டு கடலூர் புயல் 959 எம்.பி.

3. 1996-ம் ஆண்டு சென்னை புயல் 967 எம்.பி.

4. 1993-ம் ஆண்டு காரைக்கால் 968 எம்.பி.

5. 2011-ம் ஆண்டு தானே 969 எம்.பி.

6. 2000-ம் ஆண்டு இலங்கை புயல் 970 எம்.பி.

7. 1984ம் ஆண்டு கடலூர் புயல் 973 எம்.பி.

8. 2016ம் ஆண்டு வர்தா புயல் 975 எம்.பி.

9. 1984-ம் ஆண்டு ஹரிகோட்டா புயல் 975 எம்.பி.

ஆதலால், தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் ஆழ்ந்த புயலாக மட்டுமல்லாமல் கடும் புயலாகவும், கடல்பகுதியில் மிகக் கடும் புயலாகவும் இருக்கும். வடக்கு தமிழக கடற்பகுதியை நெருங்கும்போது காற்று தீவிரமாகும். மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க மாடல்கள் கூறுகின்றன. ஆனால், வரும் நாட்களில் அதன் தீவிரத்தன்மை தெரியவரும்.

ரெட்அலர்ட்

சென்னை வானிலை மையம் அறிவிக்கும் ரெட் அலர்ட் என்பது புயலோடு தொடர்புடையது. ஆதலால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். 24 மணிநேரத்தில் 200மிமீ மழையைப் பெய்துவிட்டு செல்லும்.

புதுச்சேரி அல்லது கடலூர் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதன்பின், புயல் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குள் செல்லும்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கேட்டி, கொடநாடு, கோத்தகிரி பகுதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியவை.

 

சென்னையில் எப்படி இருக்கும்?

கடலூரை நோக்கி கஜா புயல் சென்றுவிட்டால் சென்னைக்கு குறைந்த அளவே பாதிப்பு இருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகையில் புயல் கரையைக் கடக்கும்போது பெய்த மழை அளவு தரப்பட்டுள்ளது.

1. 2015-ம் ஆண்டு நவம்பரில் புதுச்சேரியில் புயல் கரைகடந்த போது சென்னையில் ஒரேநாளில் 200மி.மீ மழை பதிவானது.

2. 2013-ம் ஆண்டு வில்மா புயலால் சென்னையில் 2 நாட்களில் 110மி.மீ மழை பெய்தது.

3. 2012-ம் ஆண்டு நிலம் புயலால் சென்னைக்கு 2 நாட்களில் 120 மி.மீ மழை கிடைத்தது.

4. 2011-ம் ஆண்டு தானே புயலால் கடலூர், சென்னையில் ஒரே நாளில் 100 மி.மீ மழை பெய்தது.

5. 2008-ம் ஆண்டு நிஷா புயலால் காரைக்கால், சென்னையில் 4 நாட்களில் 400மி.மீ மழை பதிவானது.

இந்தப் புயல் அனைத்தும் தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மேற்குவடமேற்காக நகர்ந்து தமிழகம் நோக்கி வந்தது. 1996-ம் ஆண்டு புயல் மட்டும் வடமேற்கு வங்கக்கடலில் இருந்து மேற்குதென்மேற்கு நோக்கி வந்தது.

இப்போதுவரை கணித்தபடி கடலூரில் புயல் கரையைக் கடக்கும்.சென்னையில் 14-ம் தேதி இரவு அல்லது 15-ம் தேதி காலை முதல் 17-ம் தேதி வரை மழை இருக்கும். 15-ம்தேதியில் இருந்து காற்றுவீசக்கூடும் ஆனால், பெரிய அளவுக்குப் பாதிப்பு இருக்காது.

எந்தெந்த மாவட்டங்களில் மழை

வடமேற்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கடற்கரைப்பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை இருக்கும். வட மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும். கேரள மாநிலத்தில்கூட மழை பெய்ய வாய்ப்புண்டு ஆனால், கஜா புயலால் தென் மாவட்டங்களுக்குக் குறைவான மழையே கிடைக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நாளை முதல் வடதமிழக கடற்கரை முதல் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிவரை கடல் மிகுந்த ஆவேசமாக இருக்கும். ஆதலால், 16-ம் தேதிவரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம். அரபிக் கடலுக்குள் சென்றபின் புயல் என்னாகும், எப்படி மாறுகிறது என்று பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதுவரை 23 சதவீதமும், சென்னையில் 52 சதவீதமும் மழை பற்றாக்குறையாக உள்ளது. இந்த கஜா புயலால் நமக்கு நல்ல மழை கிடைக்கும். வேகமாகப் புயல் நகரும்போது, குறைந்தநேரத்தில் அதிகமான மழையைக் கொடுக்கும்.

இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.