கோட்டக்குப்பத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். C. பழனி இ.ஆ.ப ஆய்வு


கோட்டக்குப்பம் பகுதியில் நிலவிவரும் குறைந்த மின் அழுத்தம் மற்றும் மின் தடை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி கோரிக்கை விடுத்தார்.

மேலும் விரிவாக கோட்டக்குப்பம் இளமின் பொறியாளர் திரு. ஆதிமூலம் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் துணை மின் நிலையம் அமைய தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்க இதுவரை எடுத்துள்ள மற்றும் மேலும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

கனிவுடன் விபரங்களை கேட்டறிந்த ஆட்சியர் அவர்கள் இன்று மாலை ( 26-10-2023 ) வியாழன் மாலை மின் வாரிய மாவட்ட அலுவலர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தந்துள்ளார்.

மேலும் துணை மின் நிலையம் அமைக்கும் வரை கோட்டக்குப்பம் பகுதிக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேன்டும் என்றும் அதற்கான கோப்புகளை உடனடியாக பரிசீலித்து ஒப்புதல் தர மின் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆலோசனையின் போது கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் திருமதி.புஹேந்திரி, வானூர் வட்டாச்சியர் நாராயணமூர்த்தி , கோட்டக்குப்பம் நகராட்சி நகர மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக் , நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

kottakuppam_eb_protest #கோட்டக்குப்பம்_செய்திகள்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.