கோட்டக்குப்பம் இணையத்தளத்தில் உறுப்பினர் பதிவு ஆரம்பம்


அல்ஹம்துலில்லாஹ்! கோட்டக்குப்பம் இணையத்தளம் உலகம் தழுவிய மக்கள் இயக்கமாக மாறி வருகிறது.அதிகமானவர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து வருகிறார்கள். உங்களது சமுதாய அக்கறையை வெளிப்படுத்த ஓர் அறிய வாய்ப்பாக இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்துமாறு வேண்டுகிறோம். நாம் யாருக்கும் பகைவர் அல்ல. எல்லோரும் நம் சகோதரர்களே! நாம் ஒன்றிணைந்தால் விவேகமான முறையில் படிப்படியாக எல்லா மாற்றங்களையும் யார் மனமும் நோகாமல் கொண்டு வரலாம்.

சமுதாய அக்கறையுள்ள சகோதரர்களின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க ஒரு பாலமாக கோட்டக்குப்பம் இணையத்தளம் எந்நாளும் செயல்படும் என்கிற உறுதியோடு அல்லாஹ்வின் பாதையில் நாம் எடுக்கின்ற இம்முயற்சி நமதூரை அடுத்தக் கட்ட முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவாவை துஆவாக வைத்துத் துவங்குகிறோம். உறுப்பினர்களின் பெயர் வசிக்கும் நாடு தவிர இதர விவரங்கள் வெளியிட மாட்டோம். இணையத்தளம் மூலம் நீங்கள் சொல்லும் அனைத்து ஆலோசனைகளை சம்மந்தப்பட்டவர்களிடம் சொல்லி நல்ல  முடிவுகளை நடைமுறைப் படுத்துவோம். உலகலாவிய ஊர் சொந்தங்களே பதிவு செய்யுங்கள். வருங்கால சந்ததிகளை வளமாக துணிவாக வாழ வகை செய்வோம்.

Advertisements