சிகிச்சை அளிக்க மறுப்பு தமிழக கர்ப்பிணியர் மறியல்


புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையில், தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததைக் கண்டித்து, சாலை மறியல் போராட்டம் நடந்தது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழக நிலப்பரப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கோட்டக்குப்பம், வானுார், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

நேற்று காலை புதுச்சேரி ராஜிவ் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவில், தமிழக பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் பதிவு செய்து காத்திருந்தனர்.

மதியம் 1:30 மணி ஆகியும் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.

இதுகுறித்து அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தபோது, புதன்கிழமையில் கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்கும் குழுவினர், தமிழக பகுதி கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது தெரிய வந்தது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கர்ப்பிணியர், மதியம் 1:35 மணிக்கு மருத்துவமனை எதிரே நுாறடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக வாகன ஓட்டிகளும் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தினர். மறியலால் போக்குவரத்து பாதித்தது.

தகவலறிந்து வந்த ரெட்டியார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி நாராயணன் மறியலில் ஈடுபட்ட கர்ப்பிணியரிடம் பேசி, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கர்ப்பிணியரின் மறியல் போராட்டத்தால், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.