மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆறுதல்


கோட்டகுப்பம் சுற்றி உள்ள பகுதிகளை தனே புயல் தாக்கி சின்னான படுத்தி பல நாட்கள் ஆகியும், இது வரை இந்த பகுதிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வந்து  பொதுமக்களை பார்த்து  அறுதல் சொல்ல வில்லை. இதனிடையே மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கோட்டக்குப்பம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் கூறியதாவது:

 

தானே புயலால் கோட்டக்குப்பம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இப்பகுதிக்கு இதுவரை வரவில்லை. பாதிப்புகளை கணக்கிட்டு, உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கோட்டக்குப்பம் பகுதியில் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. தென்னந்தோப்புகள் அழிந்துள்ளன. அரசு உடனடியாக கோட்டக்குப்பம் பகுதிக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறினார்.

 

அப்போது, மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, தமுமுக துணை செயலாளர் ஜின்னா, தேவநேயன், நகர செயலாளர் முகமது அலி, மாவட்ட தலைவர் முஸ்தாபுதீன் உடன் இருந்தனர்.

 

இது போல் பல கட்சி தலைவர்கள் பார்த்து இங்கு இருக்கும் அவலத்தை

அரசுக்கு சொல்ல வேண்டும்,செய்வார்களா முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்கள் ?

2 comments

  1. முஸ்லிம் லீக்கின் சார்பில் அதிகமான அளவிற்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளதை ஏன் இருட்டடிப்பு செய்துள்ளீர்கள்?

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.