மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு-கிழக்கு கடற்கரை சாலையில்-விபத்து ஏற்படும் அபாயம்


மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு-

கிழக்கு கடற்கரை சாலையில்-விபத்து ஏற்படும் அபாயம்

போக்குவரத்துக்கு இடை யூறாக சுற்றித்திரியும் மாடுகளால் புதுவை அருகே கிழக்கு

கடற்கரை சாலை யில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

புதுவை&சென்னை செல்ல முக்கிய பிரதான சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக புதுவை பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி,

காலாப்பட்டு மத்திய சிறை, தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து, லாரி,

மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில் காலாப்பட்டு அடுத்த சின்னக்காலாப்பட்டு பகுதியில் உள்ள பல்கலைக்கழகம்

முதல் காலாப்பட்டு பெண்கள் பள்ளி வரை சிலர் மாடுகளை வீதிகளில் உலாவ விட்டுள்ளனர்.

சாலைகளில் தாறு மாறாக ஓடும் இந்த மாடுகள் அனைத்தும் பகல் மற்றும் இரவு நேரங்களில்

கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித்திரிகின்றன.

இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் மாடுகளின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.

அப்போது மாடுகளும் உயிரிழப்பதோடு வாகன ஓட்டிகளும் படுகாயம் அடைகின்றனர்.

எனவே மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிவதை தடுக்க

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.