தொலைபேசி வாடிக்கையாளர்கள் புகார் செய்ய ஒரே எண்: 1063


1063 toll free telecom complaints

தொலைபேசி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் சேவைக் குறைபாடுகள் குறித்து புகார் செய்ய நாடு முழுக்க ஒரே எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1063 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் எந்த  ஒரு தொலைபேசி நிறுவனத்தின் சேவை குறைபாடுகள் குறித்து முறையிட முடியும். இக்கட்டணமில்லா சேவை டெல்லியில் உள்ள தொலைத் தொடர்பு அமைச்சக தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது அந்தந்த தொலைபேசி சேவை நிறுவனங்களே குறை தீர்ப்பு வசதியைத் தந்தாலும் இவற்றின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என புகார்கள் வந்த நிலையில் இச்சேவையை தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது.

 

credits:puthiyathalamurai
Advertisements