இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அங்கீகாரம் காலவதியகிவிட்டதா?


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரில் தமிழகத்தில், இரண்டு கட்சிகள் உள்ளன. ஒரு கட்சிக்கு, முன்னாள் எம்.பி., காதர்மொய்தீனும், மற்றொன்றுக்கு, மறைந்த அரசியல் தலைவர் காயிதேமில்லத்தின் பேரன் தாவூத் மியாகானும் மாநிலத் தலைவராக உள்ளனர். இரு கட்சிகளும், ஒவ்வொரு தேர்தலிலும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அணிகளில், தனித்தனியே கூட்டணியில் இடம் பெறும். கடந்த 10 ஆண்டுகளாக, எதிரெதிர் அணிகளில் தான் செயல்படுகின்றன.

தற்போது உண்மையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி யார் என்பதற்கு, அதிக போட்டி ஏற்பட்டுள்ளது. தாவூத் மியாகான் ஒரு பக்கமும், மறைந்த அப்துல் சமதுவின் மகள் பாத்திமா முசபர் மற்றொரு புறமும், தேர்தல் கமிஷனுக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர். தாவூத்மியாகான் புகார் அடிப்படையில், தேர்தல் கமிஷன் கடந்த ஜூலை மாதம், காதர்மொய்தீனுக்கும், மத்திய அமைச்சர் இ. அகமதுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் கூறப்பட்டிருந்ததாவது: காதர்மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிலும், தி.மு.க.,விலும் உறுப்பினராக பதிவு செய்துள்ளார் என்றும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி என்ற கட்சியிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிலும் உறுப்பினராக பதிவு செய்துள்ளார். இந்திய தேர்தல் கமிஷன் விதிப்படி, ஒருவர் ஒரு கட்சியில் மட்டுமே உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளில் உறுப்பினராக இருப்பதை, தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காது. எனவே, இதுகுறித்து பதில் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தது.

அடுத்த மாதத்தில் நாங்கள் தான் முஸ்லிம் லீக்: இப்பிரச்னை குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி மாநிலத்தலைவர் காதர்மொய்தீன் கூறியதாவது: காயிதே மில்லத் காலம் முதல் முஸ்லிம் லீக் கட்சிகள், மாநில வாரியாக தனித்தனி பெயர்களில் செயல்படுகின்றன. தமிழக மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை, 1984ம் ஆண்டு முதல், தி.மு.க., – அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணியிட்டு, உதயசூரியன், இரட்டை இலை மற்றும் கை சின்னங்களில் நின்று வெற்றி பெற்றது.

தற்போது, இந்திய தேர்தல் ஆணைய புதிய நிபந்தனைகளால், பல மாநிலங்களில் பல பெயர்களிலுள்ள எங்கள் கட்சியை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற ஒரே பெயரில் இணைக்க உள்ளோம். முதல்கட்டமாக, கேரளாவில் இ.அகமதுவை தலைவராக கொண்ட, முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி கட்சியை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இணைக்கும் பணி முடிந்துள்ளது. தமிழகத்தில், அடுத்த மாதம் 30ம் தேதிக்குள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன், தமிழக மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை இணைத்து விடுவோம். இதனால், கேரளா, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களின், முஸ்லிம் லீக் கட்சிகளும் ஒரே தலைமையின் கீழ் வரும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற அளவுக்கு கட்சியில், பலமுனைப்போட்டி வலுத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை பதவி நீக்கம் செய்ய ஒரு அணி கோரிக்கை விடுத்துள்ளது.

தாவூத் மியாகானை பொறுத்தவரை, எங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். எங்களுக்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்குகள், சுப்ரீம்கோர்ட் வரை தள்ளுபடியாகி விட்டன. தற்போது, புதிய பிரச்னையை கிளப்பியுள்ளார். அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக தேர்தல் கமிஷன் “செக்’ : உள்ளாட்சி தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தோர், 117 இடங்களில் வென்றுள்ளனர். இதில், 39 பேர் கட்சியிலிருந்து கேட்கப்பட்ட நாற்காலி சின்னத்தில் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் சேர்க்கக்கூடாது என்று, தாவூத்மியாகான் கொடுத்த புகாரின் பேரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை வெற்றி பட்டியலில் சேர்க்க, தமிழக தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. 

இதுகுறித்து, தேர்தல் கமிஷனுக்கு முஸ்லிம் லீக் கட்சி கடிதம் எழுதியது. அதற்கு,”இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில அளவில் பதிவு செய்யப்படவில்லை. அதை பதிவு செய்த பின்னர், பட்டியலில் சேர்ப்போம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்சி பெயரில் தேர்தலில் நிற்காததால், உங்களுக்கான அங்கீகாரம் காலாவதியாகிவிட்டது. எனவே உங்கள் வேட்பாளர்கள் சுயேச்சை பட்டியலில் உள்ளனர்’ என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

இப்படி பலமுனை பிரச்னைகளில் சிக்கி தவிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை யார் கைப்பற்ற போகின்றனர். சட்டரீதியாக யாருக்கு சொந்தமாக போகிறது என, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நான் தி.மு.க., எம்.பி., தான் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி.,யாக அறியப்பட்ட, வேலூர் லோக்சபா தொகுதி எம்.பி., அப்துல்ரஹ்மான் மீதான புகார் குறித்து, அவரிடமே கேட்டபோது, கூறியதாவது: தாவூத் மியாகான் ஏதாவது புதிய பிரச்னைகளை எழுப்பி கொண்டிருப்பார். என்னை பதவி நீக்கம் செய்ய, சபாநாயகர் மீராகுமாரிடம் அவர் மனு அளித்திருந்தாலும், அதன்பேரில் என்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனென்றால், நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி யில், எந்த பதவியிலும் கிடையாது; ஏன், நான் அதில் உறுப்பினர் கூட கிடையாது. என்னை பொறுத்தளவில், உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தி.மு.க., எம்.பி., எனவே, தாவூத்மியாகானின் புகார் ஆதாரமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: dinamalar

15 comments

  1. இது வரை நாங்கள் முஸ்லிம் லிகின் MP என்று சொல்லி வந்தார்கள், இப்போது தி முக வின் உறுபினர் எனக்கும் முஸ்லிம் லிகில் சம்மந்தம் இல்லை என்கிறார்கள், இவர்களை நம்புவதை விட ம ம க வில் அணைத்து சமுதாயமும் இன்னைய வேண்டும்

    Like

  2. All these days I thought this website is beyond political stand, but now intensionally giving too much important to this news by highlighting in red colour few lines we understand your color and just having a mask we are netural website. Lot of news we are seeing in the newspapers and weekly magazines against other muslim organisations like TNTJ, INTJ &, TMMK , you are not publishing these news in your site, but if you found any news against muslim league immediately you feel happy and publishing. Well Keep it up your neutralised policy.

    Keep in mind one thing, if you criticise any of the muslim organisations or party it means you are splittering on your own community. In muslim league stages or in their website or in their newspaper they never criticise any other muslim parties, they keep it as their policy which shows their Kanniyam. But you people to get publicity you are publishing this kind of news which our Enemies (Dinamlar paper) doing.

    I saw one website IUML Kottakuppam (purely political party website) in that site so far they never published any news criticising any other muslim organisations, inspite they are covering all the political parties news in good way whether they are against them or suporting them. I think since they are brought up from Muslim league party they have such a high and decent behaviour & culture.

    Like

  3. அன்புள்ள ரஹ்மான் பாய், உங்கள் கருத்துக்கு நன்றி, எங்கள் மேல் இதுநாள் வரை நம்பிக்கை கொண்ட நீங்கள் இப்போது எங்களை நடுநிலை தவறியதாக சொல்லுவது வேதனை அளிக்கிறது, நங்கள் நடுநிலை செய்தி தருவதற்கு சாட்சி உங்கள் கருத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம், அது without moderation இணணயத்தில் தெரியும், இதையே நீங்கள் சொல்லும் இணையத்தளத்தில் அவர்களை பற்றி சொல்லி பாருங்கள், அது கண்டிப்பாக வெளியிட மாட்டார்கள், அதை நாங்களே பல சமயம் பார்த்து இருகிறோம்.அப்புறம் ஜனாப் அப்துல் ரஹ்மான் mp அவர்கள் சொன்னதை நங்கள் சிகப்பு கலரில் கோடிட்டு கட்டி இருந்தோம், அது ஏன் என்றால் சமுதாயத்தில் பெரிய பதவியில் இருக்கும் அவர் சொன்னது, தான் தி மு கவின் உறுப்பினர், முஸ்லிம் லிகில் உறுப்பினர் கிடையாது என்று உளறி இருக்கிறார், இந்த பொய்யனின் சாட்சி நீங்கள் சொல்லும் அந்த இணணயத்தில் அவரின் படம் தான் முன்னாடி உள்ளது, நங்கள் கேட்பது என்னவென்றால், ஒரு கட்சின் உறுப்பினர் இல்லாதவர் புகைப்படம் எப்படி அவர்களின் அதிகர பூர்வமான இணணயத்தில் இருக்கும், தான் அப்படி சொல்ல வில்லை என்று இது வரை மறுப்பு இல்லை, இப்படி பட்ட வர்களின் முக முடியை தான் நங்கள் வெளியிட்டோம், முஸ்லிம் லிக் வரலாறு எங்களுக்கும் தெரியும், அதன் இன்றைய தலைமை corporate கொள்ளையர்களாக இருப்பதாய் நீங்கள் நேரில் கண்டு கொண்டு இருபிர்கள்.அப்புறம் மற்ற சமுதாய இயக்கம் தப்பு செய்தல் அதையும் நாங்கள் மக்களுக்கு தெரிய படுத்துவோம், நீங்கள் உண்மையான சமுதாய ஆர்வம் உள்ளவர் என்றால் எங்களுடன் சேர்ந்து பனி செய்ய அழைக்கிறோம், நிங்களும் உங்களின் கருத்தை ஒரு செய்தியாக்கி இதில் பதிவிடலாம்.

    Like

  4. Right, you have copied as it what was published in the Dinamalar newspaper, but did you published the marupu seithi given by IUML head, if you are straight forward you should publish that news also, go and see lalpetexpress.com (which is also neurtral website publishing all the muslim parties news) how they have published.

    How dare you can say present muslim league head is a corporate thieves, can you show single proof. (this is totally uncessary words in your answer for my comment, but you have shown what you have in your heart through your words, this is your original color) . Nethu katchi arambithavanellam samuthaya pera solli crores and croersa earn panni vachi irukaan, but still muslim league head dont have own car you know that ithuthaan situation, but you guys saying they are corporate theives mind your words.

    Like

  5. நான் கூட அதை பார்த்தேன் அதில் அப்துல் ரஹ்மான் தன் முஸ்லிம் லிக் உறுப்பினர் என்ற விபரம் இல்லையே, மேலும் நன் சொன்ன corporate கொள்ளையர்கள் என்ற விஷயம் இது நாள் வரை அவர்களுடன் இருந்தவர்கள் சொன்னது, இதை பற்றி நம் அதிகம் விவாதிக்க வேண்டாம், அவன் அவன் செய்த நல்லதுக்கும் , பாவத்துக்கும் ஆண்டவன் பார்த்து கொள்வான்

    Like

  6. why there are lot of hue and cry for this dying party ( or may be already died party) here !!!!

    They are successful, only in conducting the ifthar party.

    Like

  7. You told something about Muslim league head referring someones statement fine, at the same time if you are neutral, one month before Madras court has given one year jail punishment for Prof. Janab,Jawahirullah (TMMK president) for looting Tsunami money collection with evidence which has came in all the newspaper and websites, why you have not published that news. ( I am not against Prof. Jawahirullha, he is also one of our community leaders, he should be respected). I am mentioning this for your neturalised policy of your site.

    2. Eight months before they was a very big issue between Mr. PJ and Mr. Bakkar regarding INTJ belongs to whom, case went to the court both of them fired each other with filthy and vulgar words, this news came in all the papers.

    Intha news ellam unga kannuku theriyala, but muslim league against news vantha you are publishing in a big way. Good, keep up your neutral policy.

    Like

  8. Dear Site administrator of this NEUTRAL WEBSITE !!!!!!!!!!!!!!!!!!!

    You claim that you have copied this message from one website and published without any change and you are not responsible for this but you are telling that you are a moderate and not belonging to a any of the muslim parties. If so, everyday you visit the following 2 websites and copy the message they publish and it should also be published in this NEUTRAL website on daily basis : websites are : http://www.poyyantj.blogspot.com & http://www.sengiskhanonline.com. First you publish the new of scolding /spitting each others by vulgar words and their scandals then you prove that you are running a neutral website.

    Do you know the sacrifices made by IUML since its inception ? It played a vital role for the partition of Pakistan. Several IUML leaders went to prisons not for mishandling/embezzling public money/donation like Mr.Jawahirulla but they went for freedom strugglings. IUML was started in 1906. You cannot prove that is leaders earned crores of money using their power/party unlike the new political parties recently started for MUSLIMS they claim for!!!!.

    Hope hereafter you will start publishing the messages publish in these 2 websites and prove your neutral stand. If you don’t have such dare don’t say hereafter you are neighther belonging to TNTJ, INTJ, MMK, TMMK etc………. You have proved that you are from TNTJ. Once in a blue moon only we are reading some messages against IUML but we can read so many news against TNTJ & INTJ in their websites itself.

    Regards
    Rafeek

    Like

  9. Bro Rafeeq ,

    u r talking about muslim league played a vital role in partition. No problem everyone agree with you. But what is the use of that ,did Pakistan flourishing after that. This muslim league make us minority after that partition.

    Jinnah bhai (muslim league) wants that because he is neither recommended for President nor for the prime minister of free india.

    So don’t discuss the past part of IUML.

    We will focus now on tamilnadu IUML which was already deteriorated. Even our tamil muslim brothers confused now with lot of league parties iuml, tmml, inl and so on. one party is supporting DMK and other one with AIADMK.

    Let us learn lesson from Coimbatore corp Chairman candidate who got third position.

    Like

  10. ரபிக் பாய் முஸ்லிம் லிக் பாகிஸ்தானுக்கு செய்தது இருக்கட்டும் நமது ஊருக்கு என்ன செய்தார்கள், இதனை வருடம் யாராவது ஒருவர் மப் யாக இருப்பர் அவர் முலமாக ஒருவருகாவது அரசாங்கம் வேலை வங்கி கொடுத்து இருகிறார்களா, இல்லை ஒரு முதியோர் பென்ஷன் வாங்கி கொடுத்தார்களா, அல்ல ஒரு உலமா பென்ஷன் வாங்கி கொடுத்தார்களா, இதில் எதுவும் இல்லை, அப்புறம் ஏன்………..

    Like

  11. கோவையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கிய விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தமுமுக விளக்கம்

    கோவையில் 1997 நவம்பர்-டிசம்பரில் வரலாறு காணாத கலவரம் நடைபெற்றது. 19 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் சூறையாடப்பட்டன. மக்கள் இவ்வாறு பரிதவித்து நின்ற நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சைய்யது நிஸார் அஹ்மது, நல்லமுஹம்மது களஞ்சியம் மற்றும் தற்போது ததஜ அபிமானியாக இருக்கும் ஜி.எம். ஷேக் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து கோயம்புத்தூர் நிவாரண நிதியைத் தொடங்கினார்கள்.

    இந்த நிவாரண நிதிக்கு தமிழகத்தில் உள்ள பொது மக்களிடமிருந்தும் வெளி நாட்டில் பணியாற்றும் இந்தியர்களிடமிருந்தும் மட்டுமே நிதிப் பெறப்பட்டது. இந்த நிதிகள் அனைத்தும் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் கோயம்புத்தூர் நிவாரண நிதி என்ற வங்கிக் கணக்கில் போடப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலை யாக வழங்கப்பட்டது.

    இந்த சூழலில் மத்தியில் வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் உள்நோக்கத்துடன் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித் துறை மூலமாக தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதியின் நிர்வாகிகளான சைய்யது நிஸார் அஹ்மது, நல்லமுஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    முதலில் வருமான வரித் துறை மிக விரிவாக விசாரணைகளை மேற்கொண்டது. கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல நாட்கள் முகாமிட்டு நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவரையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்கள். கோவை முஸ்லிம் நிவாரண நிதியிலிருந்து தொகையைப் பெற்றவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கான சான்றுகள் (எப்.ஐ.ஆர். புகைப்படங்கள் முதலியவை), கோகுலகிருஷ்ணன் ஆணையம் பரிந்துரையின் அடிப்படையில் அரசு நிவாரணம் அவர்களுக்கு கிடைத்ததா? கோவை முஸ்லிம் நிவாரண நிதி வழங்கிய காசோலை பாதிக்கப்பட்டவர்களின் வங்கியில் போடப்பட்டதற்கான அத்தாட்சி என்று விலாவாரியாக விசாரணை நடத்தினார்கள். இறுதியில் கோவை முஸ்லிம் நிவாரண நிதி மிக நேர்மையாகவும் நாணயமாகவும் இயங்கி உள்ளது என்றும், இதன் நிதி சரியான முறையில் வினியோகிக்கப்பட்டுள்ளது என்றும் வருமான வரித் துறை ஆணையாளர் தனது முடிவை அறிவித்தார்.

    இதே நேரத்தில் வெளிநாட்டி லிருந்து எப்.சி.ஆர்.ஏ. என்னும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிதியைப் பெற்றோம் என்று சி.பி.ஐ. என்னும் மத்திய புலனாய்வுத் துறை, தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, சைய்யது நிஸார் அஹ்மது, நல்லமுஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கூடுதல் மெட்ரோபோலிடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகையில், பண மோசடி செய்ததாக எவ்விதக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கில் தான் சென்ற செப்டம்பர் 30 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கோவையில் 1997 நவம்பர் டிசம்பரில் நடைபெற்ற வரலாறு காணாத கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சைய்யது நிஸார் அஹ்மது, நல்ல முஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் கோவை முஸ்லிம் நிவாரண நிதி என்னும் அறக்கட்டளையைத் தொடங்கினார்கள். இந்த அறக்கட்டளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமையகத்தின் மேற்பார்வை முகவரியில் இயங்கியது. இதனையே குற்றமாகக் கருதி பேராசிரியர்.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்களுக்கும், சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை முஸ்லிம் நிதியை நடத்திய மூவரும் மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிதியைப் பெற்றார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
    கோவை முஸ்லிம் நிவாரண நிதி திரட்டிய பணம் தனிப்பட்ட பெயரில் எந்தவொரு வங்கியிலும் முதலீடு செய்யப்படவில்லை. கோவை முஸ்லிம் நிவாரண நிதி சார்பாக திரட்டப்பட்ட தொகை அனைத்தும் அந்த நிதியின் பெயரிலேயே வங்கியில் போடப்பட்டு அதே வங்கியின் காசோலை மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத வேறுபாடின்றி அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. வருமான வரி தீர்பாணையம் இது குறித்த தனது தீர்ப்பில் (In the Income-Tax Appellate Tribunal Bench B Chennai I.T.A. No.4(Mds) இந்த நிதி மிக சரியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினி யோகிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வசூலிக்கப்பட்ட மொத்த தொகையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக வினியோகிக்கப்பட்டது.

    மிகப்பெரும் அளவில் கலவரத் தால் பாதிக்கப்பட்டு மக்கள் பரிதவித்து நின்ற நிலையில் சைய்யது நிஸார் அஹ்மது, நல்ல முஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் கோவை முஸ்லிம் நிவாரண நிதி என்னும் அறக்கட்டளையைத் தொடங்கினார்கள். பரிதவித்து நிற்கும் மக்களுக்கு உதவி செய்வதில் முழு அக்கறை செலுத்தியதால் கவனக்குறைவாக மத்திய அரசின் முன்அனுமதியை அவர்கள் பெறவில்லை. எந்தவொரு வெளிநாட்டு அரசிடமிருந்தோ நபர்களிடமிருந்தோ நேரடியாக எந்தவொரு வெளிநாட்டு நிதியும் கோயம்புத்தூர் முஸ்லிம் நிதி பெறவில்லை என்றும் வெளிநாட்டில் பணியாற்றும் தமிழ்நாட்டவர் மட்டுமே நிதிகளை அனுப்பினார்கள் என்றும் இதனை வெளிநாட்டு நிதி என்று சொல்வது தவறு என்றும் இவ்வழக்கில் அவர்கள் தரப்பு வழக்குறைஞர் தெளிவாக வாதாடினார் என்பது கவனிக்கத்தக்கது.

    எழும்பூர் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்காக நிறுத்தி வைத்தார். அடுத்து செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். மக்களுக்கு நன்மை செய்ததைத் தவிர வேறு எதுவும் இதில் இல்லை. விரைவில் அனைவரும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம்.

    இந்த உண்மைகளுக்கு மாறாக யாராவது அவதூறு பரப்பினால், மறுமையில் வல்ல ரஹ்மானின் முன்பு வழக்கு தொடுப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.