கனமழையால் மிதக்கிறது, போக்குவரத்து ஸ்தம்பித்தது


கோட்டக்குப்பத்தில் நேற்று காலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால், நகர் முழுவதும், சாலைகள் வெள்ளக்காடாகி, போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தன் கணக்கை துவக்கிவிட்டது. நேற்று முன்தினம் இரவு இடி,மின்னலுடன் பெய்த மழை, அதிகாலை வரை நீடித்தது. அதிகாலை மீண்டும் துவங்கி, மூன்று மணி நேரத்திற்கும் மேல் வெளுத்து வாங்கிய மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வழக்கம் போல் மின்சாரம் துண்டிக்கபட்டது.

சாதாரண மழைக்கே போக்குவரத்து பாதிக்கப்படும் சூழலில், தீபாவளி பண்டிகையும் சேர்ந்து கொண்டதால், சென்னை-பாண்டி ECR ல் முத்தியால்பேட் முதல் கோட்டைமேடு வரை வாகனங்கள் காலை முதலே அணிவகுத்து நின்றன. இதனால் இரு சக்கர ஓட்டிகள் மாற்று வழி பழைய பட்டின பாதையில் பயணம் மேற்கொண்டனர் அங்கும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சிதம்பரம், கடலூர் மற்றும் ECR ல் செல்லும் பயணிகள் 3 மணி நேரம் பதிகபட்டனர். கோட்டக்குப்பத்தில் போக்குவரத்து காவல் இல்லாதது  ஒரு குறையாகவே உள்ளது.

20111026-122919.jpg

20111026-122932.jpg

20111026-122947.jpg

20111026-123003.jpg

20111026-123021.jpg

20111026-123035.jpg

20111026-123049.jpg

20111026-123113.jpg

20111026-123125.jpg

3 comments

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.