பதவி ஏற்பு


பதவி ஏற்பு

கோட்டகுப்பம் பேரூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் வார்டு உறுபினர்களின் பதவி ஏற்பு விழா இன்று காலை பேரூராட்சி மன்றத்தில் பொது மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

முதலில் பேரூராட்சி தலைவராக சகோதரி. ராபியத்துல் பஷிரியா பதவி ஏற்றார்கள், பின்னர் வார்டு உறுபினர்கள் பதவி பிரமாணம் எடுத்தனர்.பேரூராட்சி செயல் அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பேரூராட்சி தலைவர் ரபியஸ்துல்லா பசிரியாவுக்கு முதலில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 18 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் வானூர் எம்எல்ஏ ஜானகிராமன், முன்னாள் எம்எல்ஏ கணபதி மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தை கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விழா அரங்கில் அதிமுக தொண்டர்கள் அதிக அளவில் அமர்ந்திருந்தனர். அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விழாவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. சப்இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, விழா அரங்கில் இருந்த அதிமுக தொண்டர்களை வெளியே அனுப்பினர். அதன் பின்னர் பதவி ஏற்பு விழா தொடங்கியது.

 

20111025-175855.jpg

20111025-175911.jpg

20111025-175924.jpg

20111025-175941.jpg

20111025-180002.jpg

20111025-180019.jpg

20111025-180035.jpg

20111025-180052.jpg

20111025-180110.jpg

3 comments

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.