மார்க்சிய லெனினிஸ்ட் வேட்பாளர் ஓட்டுகேட்பு


மார்க்சிய லெனினிஸ்ட் வேட்பாளர் ஓட்டுகேட்பு

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிய லெனினிஸ்ட் கட்சி சார்பில் வரத்துண் பிவி இஸ்மாயில் போட்டியிடுகிறார்.இவர் நேற்று பட்டினத்தார் தெரு, பழைய பட்டினம் பாதை, மரக்கரையர் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று தண்ணீர் குழாய் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தான் வெற்றி பெற்றால் மேற்கண்ட பகுதிகளில் சோடியம் ஹைமாஸ் விளக்கு பொருத்தப்படும் என்றும், அனைத்து தெருக்களிலும் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும், வார்டு முழுவதும் குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படும், சுத்தமான குடிநீர் வசதி தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும், வார்டுக்கான பேரூ ராட்சி நிதியை முழுமையாக பெற்று மக்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும், வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களை கண்டறிந்து உதவித்தொகை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார். மேலும் இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் பெற்றுத் தரப்படும். கோட்டக்குப்பம் பகுதியில் தடையில்லா மின்சாரம் ஏற்படுத்தப்படும். 10 படுக்கை வசதிகள் கொண்டு துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும். அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும், தீயணைப்பு நிலையம் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். ஓட்டு சேகரிப்பில் வரத்துண் பிவி இஸ்மாயிலுடன் அகில இந்திய தொழிற்சங்க மைய மாநில செயலாளர் மோதிலால், உறுப்பினர் சங்கரன், வானூர் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், புரட்சிக்கர இளைஞர் கழக உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.