உள்ளாட்சி தேர்தல் நடக்கும் நாளில் கட்டாய அரசு விடுமுறை


                          உள்ளாட்சி தேர்தல் நடக்கும் நாளில் கட்டாய அரசு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் 17.10.2011 மற்றும் 19.10.2011 ஆகிய இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. மொத்தம் 4.64 கோடி வாக்காளர்கள் இந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள்.வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை தங்களது தலையாய கடமையாக கருதவேண்டும் என்பதற்காக மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில், முதல் கட்டமாக 17.10.2011 அன்று தேர்தல் நடைபெறும் இடங்களுக்கும், இரண்டாவது கட்டமாக 19.10.2011 அன்று தேர்தல் நடைபெறும் இடங்களுக்கும் இந்திய செலாவணி முறி சட்டம் 1881 பிரிவு 25-ன் கீழ் அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. “தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994”, “சென்னை, மதுரை, கோயம்புத்தூர் நகராட்சிகள் சட்டம்” மற்றம் “தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920” ஆகியவற்றின்படி வர்த்தகம், வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இந்த விடுப்புக்காக சம்பளத்தில் ஏதும் பிடித்தம் செய்யக் கூடாது. வேலை வழங்கும் நிறுவனங்களும் இதனை முழுமையாக கடைபிடித்து, நிறுவனங்களில் பணியாற்றுவோர் தேர்தலில் தவறாது வாக்களிக்க, அவர்களுக்கு விடுமுறை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் முனைவர் சோ. அய்யர், இ.ஆ.ப., (ஓ) அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.