கோட்டகுப்பம் ஷாதி மஹால் – அழிந்து வரும் அதிசயம்


கோட்டகுப்பம் ஷாதி மஹால் – அழிந்து வரும் அதிசயம்

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த நமதூர்வாசிகளின் பெரும்  முயற்சிகளால் கட்டப்பட்ட ஷாதி மஹால் கோட்டகுப்பத்தின் அடையாளமாக  பார்க்கப்பட்டது. அது வரை நமதூரில் நடக்கும் சுபகாரியங்கள் அனைத்தும் அவரவர்விடுகளில் நடைபெற்றது.  ஷாதி மஹால் வந்த பிறகு ஊரின் அணைத்து நிகழ்சிகளும் இங்கு தான் நடைபெறும்.

ஆனால் ஷாதி மஹால் இன்று இருக்கும் நிலையை பார்த்தல், பார்பவர்கள் கண்ணீர் விடுவார்கள். பராமரிப்பு கொஞ்சம் கூட இல்லாமல் கூடிய சிக்கிரம் பழகும் நிலையில் உள்ளது.

வாரத்தின் பெரும்பாலும் அணைத்து நாட்களும் மண்டபத்தில் விஷேசம் நடக்கும், அவர்களிடம் வசூலிக்கும் தொகையை கொண்டு தான் ஜாமியா மஸ்ஜிதின் நிர்வாகம் நடக்கிறது, ஆனால் வாங்கும் காசுக்கு கொஞ்சம் கூட செலவழிக்காமல் இருப்பது ஏன் என்று வியப்பாக உள்ளது. உடனே தனியார் திருமண மண்டபத்தின் வாடகை போல் இவர்கள் வாங்குவது இல்லை, அதனால் கொடுக்கும் காசுக்கு தான் வசதி கிடைக்கும் என்று சில அதிமேதாவிகள் சொல்லுவார்கள். தனியார் மண்டபத்தில் லாபநோக்கோடு பணம் வாங்குகிறார்கள், ஆனால் இது பொது சொத்து, இங்கே லாபம் பார்க்காமல் சேவை ஒன்றே நோக்கமாக இருக்கணும். இப்பொது வாங்கும் வாடகை அதன் பராமரிப்புக்கு போதுமானது.

மேலும் இதற்கு என்று ஒரு நிர்வாக கமிட்டி போட்டு இதன் நிர்வாகத்தை செய்தால் ஷாதி மஹால் அழிவில் இருந்து காக்கலாம்.

கிழே இருக்கும் புகைபடத்தில் மண்டபத்தின் இன்றைய நிலையை பாருங்கள்

குறுகிய மேல் தல வழி :மண்டபத்தின் மேல் தளத்தில் தான் பெண் விட்டார்கள் அமருவார்கள். அவர்கள் படிக்கட்டின் மேல் ஏறும் இடம் சிறியதாக இருப்பதால், பலருடைய தலை பதம் பார்க்க பட்டது.

20110702-114451.jpg       20110702-114515.jpg

 வெள்ளை அடித்து பல வருடங்கள் ஆச்சு :  விசேஷ தருணத்தில் வெளி ஊர்களை சேர்ந்தவர்கள் பெருமளவில் வரும் இடம் ஷாதி மஹால், அவர்களின் முக சுளிப்புக்கு இடம் கொடுக்கும் வகையில் பல அவமானங்கள் நிறைய உள்ளது. தரமான பெயிண்ட் அடிக்காமல் இருப்பதும் காரணம்.

20110702-114536.jpg   20110702-114505.jpg

\20110702-114526.jpg  20110702-114547.jpg

நிறம் மாறிய மண்டபம் தரை : மண்டபம் எடுபவரிடம் பராமரிக்க தனியாக பணம் வாங்கி கொண்டு தரையை சுத்தம் பண்ணாமல் விட்டதின் விளைவு. குறைந்த பட்சம் வருடத்தில் ஒரு இரு முறை மண்டபத்தை மற்றும் சமையல் செய்யும் இடம்,சாப்பிடும் இடம் ஆகியவைகளை பிளிச்சிங் பவுடர் மற்றும் சோப்பு ஆயில்  போன்ற  பொருட்களால் சுத்தம் செய்தல் புதிய பொலிவு கிடைக்கும்.

20110702-114556.jpg  20110702-114606.jpg

20110702-114615.jpg  20110702-114624.jpg

துர்நாற்றம் விசும் இறைச்சி கழிவுகள் : அருகில் இருக்கும் இடத்தை சுத்தம் பண்ணாமல், குப்பைகளை கொட்டி வைத்து இருகிறார்கள், இந்த இடத்தில பல மர செடிகளை வளர்த்தல் சுற்றுசுழல் நன்றாக இருக்கும், மேலும் மண்டபத்தின் அழகையும்  கூட்டும்.அருகில் இருக்கும் தென்னை மரத்தால் சிமெண்ட் ஓடுகள் பல உடைந்து, மழை காலத்தில் சமையல் செய்ய முடியாத நிலை உள்ளது . அரவை இயந்திரம் பழுதாகி பல மாசம் ஆகியும் அதை சரி பண்ண நேரம் இல்லையோ.

 
20110702-114655.jpg
  20110702-114635.jpg


20110702-114723.jpg
  20110702-114755.jpg

20110702-114732.jpg  20110702-114746.jpg

மணமகன் அறையின் அழகு : 

மணமக்களுக்கு அலங்காரம் பண்ணலாம்,  ஆனால் அதன் அறையின் அழகை யார் சரிபடுத்துவது. கதவு பல உடைந்து, உள்ளே இருப்பவர் யார் என்று வெளியே தெரிகின்றது. இதற்கு ஏன் கதவு என்று காதுபட பலர் பேசுவது நிர்வாகிகளுக்கு கேட்கலையோ.


20110702-114714.jpg
  20110702-114804.jpg

வீரல் விட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சுவர்கள்

 20110702-114812.jpg  20110702-114847.jpg

20110702-114821.jpg  20110702-114906.jpg

20110702-114917.jpg  20110702-114857.jpg

கல் இல்லை என்றால் சாப்பாடு ஏது :


20110702-114929.jpg
  20110702-114937.jpg

20110702-114945.jpg  20110702-114954.jpg

20110702-115013.jpg

20110702-115124.jpg 

ஊருக்கு பெருமை சேர்த்த ஷாதி மஹாலை இனிமேலாவது

காப்பாற்ற நிர்வாக சபை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

தற்போதைய உடனடி தேவைகள்.

1.அனைத்து செயல்படாத மின்விசிறிகள் மாற்றம்.

2.புதிய தரமான பெயிண்ட்.

3.சாப்பிடும் இடத்தில உள்ள அனைத்து மேசை இருக்கை மாற்றம்.


செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.