பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?


பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு

என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு

தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.

நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு

பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.

ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport. gov.in/pms/ Information. jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s)

in full” என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா

என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present

Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year

along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும்

From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft,

click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய

போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below”

என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள் 

[] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின்

அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். 

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய

இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்

  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

  • 10வது மேல் படித்திருந்தால் ECRமுத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா… நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.

Credit goes to :http://mastanoli.blogspot.com/

12 comments

  1. 1.

    Fresh Passport (36 pages) of 10 years validity

    (including minors between 15 to 18 years of age, who wish to get a 10 years full validity passport)

    Rs 1,000/-

    2.

    Fresh Passport (60 pages) of 10 years validity

    Rs. 1,500/-

    3.

    Fresh Passport for Minors (below 18 years of Age) of 5 years validity or till the minor attains the age of 18 which ever is earlier.

    Rs 600/-

    4.

    Duplicate Passport (36 pages) in lieu of lost, damaged or stolen passport

    Rs. 2500/-

    5.

    Duplicate Passport (60 pages) in lieu of lost, damaged or stolen passport

    Rs. 3000/-

    6. Police Clearance Certificate/ ECNR/Additional Endorsements Rs.300/-
    7. In case of Change of Address, Name, Date of Birth, Place of Birth, Appearance, Spouse Name, Name of Parents/Legal Guardian Rs.1000/- [Fresh passport booklet will be issued]

    Like

  2. The TATKAAL fee is in addition to the applicable passport fee and payable either in cash or DD in favor of Passport Officer concerned. The additional fee for out of turn TATKAAL passport, would be as follows:

    Fresh Passport

    1.

    Within 1-7 days of the date of Application

    Rupees 1,500/- plus the passport fee of Rs.1000/-

    2.

    Within 8-14 days of the date of Application

    Rupees 1,000/- plus the passport fee of Rs.1000/-

    Replacement of Passport (in lieu of Lost/Damage Passport)

    1.

    Within 1-7 days of the date of Application

    Rupees 2,500/- plus the duplicate passport fee of Rs.2500/-

    2.

    Within 8-14 days of the date of Application

    Rupees 1,500/- plus the duplicate passport fee of Rs.2500/-

    Re-issue cases after expiry of 10 years validity

    1.

    Within 3 working days of the date of application

    Rupees 1,500/- plus the passport fee of Rs.1000/-

    Like

  3. “அனுபவம் போன்ற சிறந்த ஆசிரியர் இல்லை” என்ற பொன் மொழிக்கு ஏற்ப, உங்கள் இந்த வலைப் பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும.

    உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

    Like

  4. ஏன் இப்படிலாம் காப்பி செஞ்சு போடுறீங்க? சொந்தமா எழுதின என் பெயரையாவது போட்டிருக்கலாம், அட என்கிட்ட ஒரு வார்த்தையாவது கேட்டிருக்கலாம். நான் எழுதியது இங்கே . அடுத்தவர்களின் எழுத்தை எடுப்பதற்கு முன்பு யேசிங்கள்.

    செந்தமா எழதுனாத்தான் என்றும் நல்லது.

    நட்புடன்
    மஸ்தான்

    Like

  5. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்

    எனது மனைவிக்கு Passport Apply செய்து 6 மாதங்கள் ஆகிறது(Trichy) .இன்னும் Passport வரவில்லை.எங்கு complaint செய்வது ?

    Like

  6. ஹலோ மிஸ்டர் மஸ்தான் அலி, நான் உங்கள் எழுத்தை திருடவில்லை, கிழ் கண்ட இணையத்தளத்தில் http://www.sengiskhanonline.com/2010/11/blog-post_4511.html
    காணப்பட்டதை தான் நான் மக்களுக்கு சென்றடைய எங்களுடைய தளத்தில் போட்டோம். உண்மை இப்படி இருக்க நீங்கள் தான் யார் எழுதியது என்று தெரிவிக்க வேண்டும். என்னுடைய எல்லா பதிவுகளிலும் மற்றவர்கள் இருந்து எடுத்தல் அவர்களின் பெயர்களை கண்டிப்பாக கிழே குறிப்பிட்டு இருக்கும். வேண்டுமானால் பழைய பதிவுகளை பார்வை இடவும்.

    Like

  7. என்னத்த தெரிவிக்க வேண்டும்??? யாரு அவர்கள் http://www.sengiskhanonline.com??? நான் எழுதியது 05/04/2010, அதிகமானோர் இதை திருடி அவர்கள் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

    Like

  8. கூடுதல் தகவல்
    18 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு தட்கால் முறையில் பாஸ்போர்ட் எடுக்க
    1) ANNEXURE “H” என்ற படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பதுடன் இணைக்க வேண்டும்
    2) டிடி ரூ 2100க்கு எடுத்து இணைக்க வேண்டும்

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.