வடிகால் வசதி இல்லாததால்-நோய் பரவும் அபாயம்


வடிகால் வசதி இல்லாததால்

கோட்டக்குப்பம் பகுதியில் மழைநீர் தேங்கும் அவலம்

நோய் பரவும் அபாயம்

 

வடிகால் வசதியில்லாததால் கோட்டக்குப்பம் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கும்

அவல நிலை உருவாகி இருக்கிறது. இதனால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.

கடந்த இரண்டு வாரத்துக்கு முன் ஜல் புயலால் புதுவை தமிழக எல்லையான கோட்டக்குப்பம்

பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று பெய்த மழையில் முக்கிய சாலையான கிழக்கு கடற்கரை சாலையில்

தமிழக எல்லைப்பகுதிகளில் இருந்து இந்தியன் வங்கி வரை இருபுறங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது.

இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் சிரமங்களை சந்தித்தனர். அப்பகுதியின்

தெருக்களிலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் அவை குடிநீருடன் கலக்கும் அபாயம் இருக்கிறது.

இதன் காரணமாக நோய் பரவும் வாய்ப்பும் உருவாகி இருக்கிறது. எனவே கிழக்கு கடற்கரை

சாலையோரங்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து தெருக்களிலும் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

இதை தமிழக அரசு தான் செய்ய வேண்டும். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தின்

கடைக்கோடியில் கோட்டக்குப்பம் உள்ளதால் இங்குள்ள பிரச்னை மாவட்ட நிர்வாகத்துக்கு

உடனடியாக தெரிவதில்லை.இதுவே இப்பகுதி புறக்கணிக்கப்படுவதற்கு ஒரு காரணம் ஆகும்.

இதை கருத்தில்இந்த பகுதியை புறக்கணிக்காமல் மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்த

வேண்டும் என்று கோட்டக்குப்பம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.