இலவச தொலைபேசி எண் இன்று முதல்அறிமுகம்


இலவச தொலைபேசி எண் இன்று முதல்அறிமுகம்

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு பொதுமக்கள் குறைகளை கேட்க 1070 என்ற

கட்டணம் இல்லாத தொலைபேசி கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

மக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதோடு காலமும், பணமும் விரையம் ஆகாமல்

திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் குறைகளை 1070 என்ற கட்டணம் இல்லாத

தொலைபேசியில் தெரிவிக்கலாம் என்ற நிலை மேலும் வலுப்படுத்தப்பட்டு கூடுதல் இணைப்புடன்

1070 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி, பொது விநி யோகத் திட்டத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள் ளது.

இதன்மூலம் மாவட்டத் தில் எங்கிருந்தும் ஒருவர், ரேஷன் கடை திறக்கவில்லை என்றாலும்,

பொருட்கள் வழங்கப்படவில்லை என்றாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு ரேஷன் கடை மூடப்பட்டாலும்,

சில பொருட்கள் வழங்கவில்லை என்றாலும் தெரிவிக்கலாம். மேலும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது

பற்றி 1070 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிக்கப்பட்ட 20 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை, எளிய மக்கள் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.