கோட்டக்குப்பத்தில் குழந்தைகளை கடத்த முயன்றவர்கள் கைது


கோட்டக்குப்பத்தில் குழந்தைகளை கடத்த முயன்றவர்கள் கைது

 

புதுவையில் 5 முக்கிய தொழிலதிபர்களின் குழந்தைகளை கடத்த திட்டமிட்ட கும்பலை

போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல் கிடைத்துள்ளது.

புதுவை வடக்கு காவல் சரக பகுதியில் குற்றங்களை தடுக்க எஸ்.பி. சிவதாசன் உத்தரவின்பேரில்

போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் இரவு ரோந்துப்பணி,

வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன.

காலாப்பட்டு பகுதியில் நேற்றிரவு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்&இன்ஸ்பெக்டர் ரமேஷ்

ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது, சின்ன காலாப்பட்டு சாய்பாபா கோயில் அருகே

ஒரு கும்பல் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது.

இதையடுத்து அந்த கும்பலை மடக்கிய போலீசார் விசாரணை நடத்தினர்.

முன்னுக்குப்பின் முரணான தக வலை கூறவே அவர்களை சோதனையிட்டனர்.

அப்போது பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்களிடம் சல்பியூரிக் ஆசிட், மயக்க மருந்து பவுடர்களும் இருந்தன.

இதையடுத்து 6 பேரையும் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்த போலீசார் விடியவிடிய

தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் பிள்ளைச்சாவடியை சேர்ந்த செய்யாலு (25),

ராமலிங்கம் (22), அவரது தம்பி ராமதாஸ் (19), முத்தியால்பேட்டையை சேர்ந்த ஹசன் அலி (22),

சரவணன் (18), பெரிய கோட்டக்குப்பத்தை சேர்ந்த காசிம் (22) என்று தெரியவந்தது.

இவர்கள் 6 பேரும் சின்னகாலாப்பட்டு பிரபல ரவுடி கோவில் மணியின் கூட்டாளிகள் என்பதும்,

வழக்கு செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் புதுவையில் 5 முக்கிய தொழிலதிபர்களின்

குழந்தைகள் கடத்த சதிதிட்டம் போட்டிருந்த ‘பகீர்’ தகவல் தெரியவந்தது. இன்று மட்டும் 2 குழந்தைகளை

கடத்த திட்டமிட்டு தயார் நிலையில் பதுங்கியிருந்தது உறுதியானது.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் 6 பேரிடம் இருந்து 1 வீச்சரிவாள்,

3 கத்தி, 2 செல்போன், 2 மோட்டார் சைக்கிள், 2 லிட்டர் சல்பியூரிக் ஆசிட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 6 பேரிடம் வடக்கு எஸ்.பி. சிவதாசன் விசாரணை நடத்தினார்.

அதன்பிறகு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன்மூலம் புதுவையில் நடக்கவிருந்த குழந்தை கடத்தல் தடுக்கப்பட்டது. இச்சம்பவம்

புதுவை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான 6 பேரும் குற்றங்களில் ஈடுபடுவதற்காக கோட்டக்குப்பம் அரசு பள்ளியை

உடைத்து சல்பியூரிக் ஆசிட்டை திருடியுள்ளனர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில்

கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் கோவிந்தன்

தலைமையிலான போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.