கோட்டக்குப்பம் TNTJ சார்பாக மது ஒழிப்பு பேரணி


 

Advertisements

கோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோட்டக்குப்பம் கிளை சார்பாக இந்த ஆண்டு நடைபெற்ற கோடைகாலப்பயிற்சி முகாமின் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி 6.5.18 ஞாயிறு மாலை தைக்கால் திடலில் நடைபெற்றது.

இதில் மாணவர்களின் உரைகள், குர்ஆன் சூரா ஒப்பித்தல், விழிப்புணர்வு நாடகம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. பிறகு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் 10.11.12 வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பென்கள் பெறுவது எப்படி என்ற கல்வி வழி காட்டி நிகழ்ச்சி கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் வளாகத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்சியில் கோட்டகுப்பத்தை சேர்ந்த 100 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து பயனடைந்தனர்.

சென்னையிலிருந்து வந்த மாநில தலைமையக சிறப்பு வல்லுனர்கள், பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிய அவசியத்தையும் அதற்குண்டான வழிமுறை குறித்தும் விளக்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பேரூராட்சி அலுவலகம் அருகில் TNTJ ஆர்ப்பாட்டம்


1939406_674302595942483_1581654703_o

 

 

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசின் வருவாய் துறை மற்றும் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டின் கீழ் ஐந்து கடைகள் இயங்கி வருகின்றது. இக்கடைகளில் அரசு வழங்கும் பொருட்கள் சரிவர வழங்காததாலும் அரசு வழங்கிய மின் தராசுகளை பயன்படுத்தாமல் எடை மோசடி செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை. 

தினசரி ரேஷன் கடைகள் திறந்து மக்களுக்கு சிரமம் இல்லாமல் பொருட்களை வழங்க கோரி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளான வருவாய் ஆய்வாளர் சிவில் சப்ளை, வட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார் பதிவாளர் ஆகியோரிடம் முறையாக பல முறை கடிதம் மூலமும் நேரிலும் பொதுக்கூட்ட தீர்மானங்கள் வாயிலாகவும் வழங்கியும் அலட்சியம் காட்டிய மேற்க்கண்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரியும் அரசியல் வாதிகள் இடைத்தரகர்களுக்கு துணை போகும் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கோரியும்.

1500க்கும் மேற்ப்பட்ட குடும்ப அட்டை உள்ள கடை எண் 1 யை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட தலைவர் சாகுல் தலைமைத்தாங்கினார். 

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வழியுறுத்தி மாநில பேச்சாளர் தாவுத் கைசர் கண்டன உரை நிகழ்த்தினார் இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும்திரளான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

 

புகைப்படம் செய்தி உதவி : TNTJ கோட்டகுப்பம்

ரேஷன் கடை முறைகேட்டை கண்டித்து TNTJ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


 

Sans titre Sans titre1

 

 

 

கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நடக்கும் அநியாயங்களை தடுக்கக் கோரியும் தைக்கால் அருகில் உள்ள கடை எண் 1-ல் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ளதால் அதை இரண்டாக பிரிக்கக்கோரியும் வானூர் வட்டாட்ச்சியர் அலுவலகத்தில் 11/2/14 செவ்வாய் அன்று மதியம் 3மணியளவில்கோட்டக்குப்பம் தவ்ஹிது ஜமாத் நிர்வாகிகள் வட்ட வழங்கள் அதிகாரி (TSO) திரு. ஜெயச்சந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தி மனு அளித்தனர். இதற்க்கிடையே 12.2.14 அன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட தலைவர் I.ஷாகுல் தலைமையில் நகர நிர்வாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது அதில் ரேஷன் கடைகளில் நடக்கும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் அதற்கு துணைபோகும் TSO, DSO, CSR ஆகியோர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22.2.2014 சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோட்டக்குப்பம் பேரூராட்சி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற இருக்கிறது.