விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில், அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். கோட்டக்குப்பம் எம்ஜி ரோட்டில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடை, பழக்கடை, இனிப்பு கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை, பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செ்யயப்பட்டன. இனிமேல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.இதே போல் சின்னமுதலியார்சாவடி, சின்ன கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் அணணாதுரை தெரிவித்தார்
Advertisements