இஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018


பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே எவரி பெரிய பள்ளிவாசலில் இன்று 12/05/2018, 5வது இஸ்லாமிய மாநாடு இனிதே நடைபெற்றது.

மாநாட்டில் ஹாஜி.பஷீர் அஹமத் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள்.

முன்னதாக லண்டனில் இருந்து வந்திருந்த அல்ஹாஜ். முஹம்மத் இப்ராஹிம் உலவி அவர்கள் திருக்குரான் கூறும் பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து இலங்கையில் இருந்து வந்திருந்த அல்ஹாஜ் ஷம் ஹுன் ரமலான் அவர்கள் திருக்குரான் மீதான நமது கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மதியம் அனைவருக்கும் சுவையான பகல் உணவு வழங்கப்பட்டது.

இரண்டாம் அமர்வில் இந்தியாவில் இருந்து வந்திருந்த சித்த மருத்துவர் அஷ்ரப் அலி அவர்கள் மாநபி வழியில் மருத்துவம் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள்.

அடுத்து இந்தியாவிலிருந்து வந்திருந்த மௌலவி யூசூப் சித்தீக் மிஸ் பாஹி அவர்கள் திருக்குரான் அமைத்த சமூகம் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார்கள்.

மாநாடு முடிவில் அனைவருக்கும் டீ பப்ஸ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பெருந்திரளாக ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாநாடு சிறப்பாக நடத்திய அணைத்து பிரான்ஸ் தமிழ் அமைப்புகளுக்கும் நன்றி.

Advertisements