பொதுசிவில் சட்ட குறித்த பேராசிரியர் ஆ மார்க்ஸ் எழுச்சி உரை – புகைப்படம் தொகுப்பு


img_2419

கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் திருமண நிலையத்தில் இன்று 13.11.2016 ஞாயிறு கிழமை அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் பொது நூலகம் சார்பில் நடைபெற்ற பொது சிவில் சட்டம் தேவையா ? நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் மனித உரிமை போராளி மற்றும் எழுத்தாளர் பேராசிரியர் ஆ. மார்க்ஸ் அவர்கள் தொடர்ந்து பொதுசிவில் சட்டம் என்கிற கருத்தாக்கத்தின் பின்புலத்தில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமாக வீரியத்தோடு முன்னெடுக்கப்படும் அரசியலை வரலாற்று சான்றுகளோடு விளக்கிப் பேசினார், மேலும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் தன்மைகள் குறித்தும் கோடிட்டு உரை நிகழ்த்தினார்.
முத்தாய்ப்பாக, முத்தலாக் உள்ளிட்ட செயல்பாடுகளை முஸ்லிம் ஜமாஅத் அமைப்புகள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து, இது குறித்து அஸ்கர் அலி இஞ்சினியர், தாஹிர் முஹம்மது, நூர்ஜஹான் சபியா நியாஜ், ஜகியா சோமன் உள்ளிட்ட நவீன சிந்தனையாளர்களின் பார்வையை பதிவுசெய்து உரையை நிறைவு செய்தார்… நிகழ்ச்சியில் திரண்டிருந்த பார்வையாளர்கள் தலைப்பை யொட்டிய பல்வேறு ஐயப்பாடுகளை முன்வைத்து கேள்விகளை எழுப்பியதும், பேராசிரியர் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு சான்றாதாரங்களுடன் கூடிய பதிலளித்து அவையை மென்மேலும் பயனுறச் செய்தார்..அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்டனர். நிகழ்ச்சியில் மௌலவி ஆ. பக்ருத்தீன் பாரூக் அவர்கள் தலைமை ஏற்றார்கள். ஹாஜி எசனுல்லாஹ் மற்றும் அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தனர். அஞ்சுமன் செயலாளர் ஜனாப் லியாகத் அலி அவர்கள் வரவேற்புரையாற்ற ஜமாத்தே இஸ்லாமியின் புதுவை மாநில அமைப்பாளர் ஜனாப் அப்துல் ஹாமித் அவர்கள் கூட்டத்தில் ஆரம்பமாக முஸ்லிம் தனியார் சட்டத்தின் நோக்கம், நடைமுறை, முக்கியத்துவம், முஸ்லிம்களின் செயல்பாடு ஆகியவற்றை முன்வைத்து உரையாற்றினார் உரை நிகழ்த்தினார்கள். ஜனாப் முஹம்மத் அனஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

முழுமையான நிகழ்ச்சி வீடியோ இணைப்பு

Advertisements