கோட்டக்குப்பம் அனைத்து ஜமாத், இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் தொடங்கியது


img_1938

மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கோட்டக்குப்பம் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோட்டகுப்பதில் இன்று (வெள்ளிக்கிழமை) கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

மத்திய பாரதீய ஜனதா அரசு கொண்டு வர முயற்சிக்கும் பொது சிவில் சட்டம் தொடர்பான நிலைப்பாட்டில் அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மேற்கொள்ளும் அனைத்து வித நடவடிக்கைகளை ஆமோதிப்பதோடு இந்த விவகாரத்தில் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் பின்னால் நிற்க கோட்டக்குப்பம் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு உறுதி ஏற்கிறது.

பல மதங்கள் உள்ள இந்தியாவில் பொதுவான உரிமையியல் சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது இந்திய கலாசாரம், வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. மதம் என்பது நம்பிக்கை கொள்வது மட்டுமல்ல. அதை செயல்படுத்துவதற்கு தேவையான சுதந்திரத்தையும் இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது.

மேலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதால் மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தி நாட்டில் சீரழிவுகளை ஏற்படுத்துவதோடு சிறுபான்மையினர் மனதில் தங்களின் உரிமைகளை இழந்த உணர்வை ஏற்படுத்தும். நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு, வறுமை ஒழிப்பு, அனைத்து மக்களுக்கும் சமஉரிமை, பாதுகாப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தன்னிறைவு போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுமானால் அதை வரவேற்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு பல்வேறு மதம், இனம் உள்ள நாட்டில் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பு கிறது.

ஒவ்வொரு மாநிலங்களின் தனித்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் பெடரல் கொள்கையை ஆதரிப் பவர்கள் நாங்கள். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் உள்பட சிறுபான்மை மக்கள் தங்களுக்குரிய சிவில் சட் டத்தை கடைபிடிப்பதால் இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கோ, பாதுகாப்பிற்கோ, முன்னேற்றத்துக்கோ எந்த குந்தகமும் ஏற்படப்போவதில்லை.

எனவே இந்த விவகாரத்தில் முஸ்லிம்களின் தனித்தன்மையை, நம்பிக்கை சார்ந்த உரிமைகளை பாதுகாக்க அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கோட்டக்குப்பம் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கிறது. பொது சிவில் சட்டம் தொடர்பாக தேசிய சட்ட கமிஷன் வெளி யிட்டுள்ள கேள்விகளை நிராகரிப்பதோடு பொது சிவில் சட்டத்துக்கு எதிராக இன்று(வெள்ளிக்கிழமை) முதல்தொடர்ந்து கோட்டக்குப்பம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது.

கோட்டகுப்பதில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்துக்கள் டெல்லியில் உள்ள தனியார் சட்ட வாரியத்துக்கு அனுப்பப்படும்.

Advertisements