தமிழகத்தின் முன்மாதிரி – மார்க்க கல்வியுடன் உலகக்கல்வியை கற்றுத்தரும் ஆக்கூர் ஒரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளி


img_8747

தமிழகத்தின் தலை சிறந்த தலைவர்கள் உருவான இந்த பள்ளியின் பெயரை நாம் அனைவரும் கேட்டு இருப்போம், நமதூர் கோட்டக்குப்பதில் இருந்து இங்கே பலர் படிக்கச் மட்டுமல்லாமல் பாடம் எடுக்கவும் சென்று இருக்கிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த பள்ளியின் புகைப்பட தொகுப்பை உங்கள் கண்களுக்கு விருந்தாக்குவதில் நாங்கள் பெறுமலர்ச்சி அடைகிறோம். 

 

இதோ அந்த உன்னத பள்ளியின் வரலாறு :- 

 

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் ஆக்கூரில் 1955 ஆம் ஆண்டு துவங்கி சமீபத்தில் பொன்விழா கொண்டாடிய ஒரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளி , அரபி பாடத்தை முதல் மொழியாக கொண்டு சமச்சீர் பாடத்தின் படி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் மார்க்ககல்வியுடன் உலகக்கல்வியை சீரிய முறையில் கற்பித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்கி வருகிறது . சமுதாயத்தின் தேவையையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு புதிய தொடக்கமாக இங்கு பள்ளியில் பயிலும் மாணவர்கள், பள்ளிப்படிப்பை முடித்து செல்லும் தருணத்தில் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழாகவும் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வரும் 2016 – 2017 கல்வி ஆண்டு முதல் ஹிப்ளு பாடப்பிரிவு, எவ்வித கட்டணமும் இல்லாமல் தொடங்க இருக்கிறார்கள்.

இந்தக் கல்விக் கூடத்திலிருந்து உருவான எண்ணற்ற தலைவர்கள் சமுதாய வானில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள் . இன்னும் ஆயிரமாயிரம் அறிவு ஜீவிகளை உருவாக்க இந்த ‘ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி’ தன் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

Advertisements