குறி வைக்கப்படும் ஜாகிர் நாயக்!! காவிகளின் அடுத்த திட்டத்தின் முன்னோட்டமா??கட்டுரை : கோட்டக்குப்பம் அ. ரியாஸ் அஹமத்

இஸ்லாமியர்களை மாற்று மத சகோதர, சகோதரிகளிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தி இந்தியவிலிருந்து முழுமையாக வெளியேற்றி, இந்தியாவை இந்து நாடாக மாற்றி மனுதரும ஆட்சியை அமைப்பதே காவிகளின் தலையாய திட்டம்.
கடந்த நூறு ஆண்டுகளாக பாபரி மஸ்ஜித் பிரச்சினை முதல் பல திட்டங்களை வடிவமைத்து செயல்ப்படுத்தி வருகிறார்கள் கோல்வார்க்கரின் வாரிசுகள்.
90’s தொடக்கத்தில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் இருந்து தொடங்கினார்கள். சுதந்திரம் இந்தியவில் இந்து முஸ்லிம்கள் ஒற்றுமை இவர்களின் திட்டங்களுக்கு தடையாக இருந்தது. அன்று தங்களின் அரசியல் பிரிவான பா.ஜ.க வலிமை பெறாத நிலையில்.. RSS பயிற்சி பெற்ற காங்கிரஸ் -யில் உள்ள தங்களின் சீடர்களின் மூலம் செயல் ஆற்ற தொடங்கியது காவி படை.
சீடர் நரசிம ராவ்-வை கொண்டு காங்கிரஸ் கொள்கைக்கு மாறாக..
★இஸ்ரேலிய தூதரகம் டெல்லியில் கொண்டுவரப்பட்டது.
★அத்வானியின் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கி இந்து முசுலிம் கலவரம் ஏற்ப்படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இரையாகின.
★கரசேவை மூலம் கவிகளை திரட்டி பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது.
இந்து முஸ்லிம் பிரிவு மட்டுமே அவர்களின் திட்டங்களுக்கு தீர்வை தரும் என்பதே அவர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. அதன் அடிப்படையில் அரசியல், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகம், நீதி துறை, ரா அமைப்பு, ராணவம், கல்வி நிறுவனம்.. ஆகியவற்றில் ஆதிக்கம் செலித்தினர். அதன் விளைவுவாக உலகில் நிகழ்த்தப்பட்ட அனைத்து தீவிரவாத தாக்குதல்களையும் இஸ்லாத்தோடும், இஸ்லாமியர்களோடும் தொடர்புபடுத்தப்பட்டது.
பின்பு, காவிகளால் திட்டமிட்டு இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட அனைத்து தாக்குதல்களும் முஸ்லிம்கள் தொடர்பு படுத்தப்பட்டு அப்பவி இஸ்லாமியர்கள் விசாரணை கைதிகளாகவும், கூட்டு மனசாட்சி என்ற பெயரில் நீதிமன்றங்கலும் (அ)நீதி வழங்கின.
“குஜராத் கலவரம் முதல் முசாபர் நகர் கலவரம் தொடர்ந்து அனைத்து கலவரங்களையும் காவிகள் முன்னின்று நடத்தினர்.”
இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் மீது அவதூறுகளை பரப்பிவந்தனர். தொடர்ந்து தொப்புள் கொடி உறவுகளிடம் இஸ்லாமியர்களை பற்றி நஞ்சை விதைத்து தவறான எண்ணத்தை உருவாக்கி வந்த நிலையில்…
தற்போது…

சமூக வலைத்தளங்களான முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர் -கள் அனைத்து மக்களிடமும் தீவிரம் அடைந்து நிலையில் மக்களே புலன் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர். தாதிரி மாட்டு பிரச்சினை முதல் தற்போதைய சுவாதி கொலை வழக்கு வரை காவிகளின் சூழ்ச்சிகளை அறிந்து அவர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் களம் கண்டு வருகின்றனர் நம் தொப்புள் கொடி உறவுகளான இந்து சகோதரர்கள்.
இந்த நல்லுறவை சிதைக்கவும், விசமத்தை விதைக்கவும் காவிப்படை கையில் எடுத்திருப்பது “ஜாகிர் நாயகின் தீவிரவாத பிரச்சாரம்” என்று…
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமது அழைப்பு பணியில் இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை மீறாமல் அனைத்து வேத நூல்களையும் தம் விரல் நுனியில் வைத்து அவற்றின் ஒற்றுமை கருத்துக்க்ளை விளக்கி வருவதோடு, அமைதி-மனிதநேயம்-சமாதானம் என அனைத்து சமயத்தினருடனும் நல்லுரவை பேனி, தீவிரவாதத்திற்கு எதிராக கருத்து பதிவேற்றி வருபவர்.
கடந்த வருடம் இறுதியில்…
★“I said every Muslim should be a terrorist to all anti social elements.”
இதுதான் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வாசகம். இதன் பொருள்,
★“ஒரு முஸ்லிம் என்பவன் அனைத்து தீமைகளுக்கு எதிராக போரிடும் விஷயத்தில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்”
இந்த கருத்தை திரித்து ஜாகிர் நாயக் அவர்களை பயங்கரவாதியாக சித்தரிக்க முயல்கிறது பா.ஜ.க அரசு.
என்ன செய்ய வேண்டும் நாம்??
★மோடியையும், காவிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் அநாகாரிகமான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.
★உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடனும், நிதானத்துடனும் நம் கண்டனங்களை பதிய வேண்டும்.
★முடிந்தவரை ஜாகிர் நாயக்-கின் சொற்பொழிவுகள், அவர் செயல்பாடுகள், அவர் பெற்ற பாராட்டுகள், விருதுகள் பற்றி நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதன் மூலம் அவர்கள் இந்த அரசையும், காவிப்படையையும் எதிர்ப்பதே வலுவாக இருக்கும்.
“தொப்புள் கொடி உறவுகளின் பீரங்கி பிரச்சாரத்திற்கு நாம் தோட்டாக்கள் அளிப்போம், அவர்கள் காவிப்படைக்கு பதில் அ(டி)ளிப்பார்கள்.”

Advertisements