அஞ்சுமன் சார்பில் இப்தார் விருந்து


img_7098

அஞ்சுமன் 90ஆம் ஆண்டுப் பெருவிழா நன்றி அறிவிப்பும் – நோன்பு துறப்பும் அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம்.ஷரீஃப் தலைமையில் இன்று அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம்.ஷரீஃப் தலைமையில் நடைபெற்றது.

அஞ்சுமன் 90ஆம் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்தேற அல்லும் பகலும் அரும்பாடுபட்டு ஒத்துழைத்த அன்பு இளவல்கள் இஸ்லாமிக் தாவா அசோசியேசன், DYFI தோழர்கள் ஆகியோருக்கு ‘சேவைச்சுடர்’ விருது கொடுக்கபட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவ முகாமை சீரிய முறையில் நடத்தி ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து சேவையாற்றிய மருத்துவர்கள் டாக்டர் அப்துல் அஜீஸ், டாக்டர் அமர்ராஜா, டாக்டர் அப்துல் ரஹ்மான், காருண்யா ஹெர்பல் ரெமடீஸ் மற்றும் பிம்ஸ் மருந்துவமனை நிறுவனத்தார் மற்றும் முகாமை ஒருங்கிணைத்த அப்துல் ரவூப் அவர்களும்ஆ கியோருக்கு அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம்.ஷரீஃப் ‘சேவைச்சுடர்’ விருதளித்து சிறப்பித்தார்..

முஹம்மது ஆசிஃப், ரஹ்மத்துல்லா, மொய்னுதீன் மற்றும் பலர் சிறப்பான முறையில் செய்து இருந்த நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

Advertisements