கோட்டக்குப்பம் பகுதிகளில் நாளை மின்சார நிறுத்தம்


power-lines

 

கண்டமங்கலம் கோட்டம் திருச்சிற்றம்பலம் மற்றும் வானூர் துணை மின்நிலையத்தில் உயரழுத்த மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் நாளை 06/06/2016 (திங்கட்கிழமை) நடக்கிறது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழே குறிப் பிட்டுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

திருச்சிற்றம்பலம், கடப்பேரிகுப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானூர், கோட்டக்குப்பம், முதலியார் சாவடி, புளிச்சப்பள்ளம், ஆண்டியார்பாளையம், நெசல், வில்வநத்தம், கொடூர், ஆரோவில், இரும்பை, ராயப்புதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன் குப்பம், ஒழிந்தியாப்பட்டு, நாவற்குளம், வானூர், நைனார்பாளையம், ஒட்டை, காட்ராம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம் ஆகிய பகுதி கள் ஆகும்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி செயற்பொறியாளர் நாகராஜ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisements