கோட்டக்குப்பம் பகுதியில் திமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு


விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி திமுக வேட்பாளர் மைதிலி ராஜேந்திரன் கோட்டக்குப்பம் பேரூராட்சி சின்னகோட்டக்குப்பத்தில் நேற்று காலை பிரசாரத்தை தொடங்கினார்.தொடர்ந்து பெரியகோட்டக்குப்பம், பழைய பட்டினம்பாதை, ரஹமத் நகர், பர்கத் நகர், ஈசிஆர் சாலை, சோதனைக்குப்பம், நடுக்குப்பம், பெரியகோட்டக்குப்பம் காலனி, தந்திராயன்குப்பம், கோவில்மேடு, பெரியமுதலியார்சாவடி ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

இதேபோல் கோட்டக்குப்பம் மீன்அங்காடி, வணிக நிறுவனங்களுக்கும் நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் பால் விலை குறைக்கப்படும். மீனவர்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும், வணிகர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். ஊழலற்ற நேர்மையான ஆட்சி உட்பட திமுக தேர்தல் அறிக்கைகளை கூறி உதயசூரியன்


சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். கோட்டக்குப்பம் நகர திமுக செயலாளர் சண்முகம், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ஜெயமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் மணி, கவுன்சிலர்கள் இளங்கோ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Advertisements