பிரான்ஸ் அரசு ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவில்லை: தலைமைச் செயலர்


 

இந்தியாவில் முன்பு இருந்து பிரெஞ்சு பகுதிகளில் வசித்து வந்த 1962-க்கு முன்பு பிறந்தவர்களுக்கு பிரான்ஸ் அரசு ஓய்வூதியத் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை என புதுச்சேரி தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரெஞ்சிந்திய பூர்வீக முதியோர் சங்கம் என்ற பெயரில் பிரெஞ்சு ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பிறந்த பதிவு போன்ற சான்றிதழ்களையும் மற்றும் பணமும் பெற்றுக் கொள்வதாக புதுச்சேரி பிரெஞ்சு தூதகரக்தால் மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் இதுபோன்ற ஓய்வூதியத் திட்டத்தை ஏதும் பிரான்ஸ் அரசு செயல்படுத்தவில்லை எனவும், இது முழுவதும் பொய்யானது மற்றும் புனையப்பட்ட தகவல் என தெளிவுப்படுத்தி உள்ளது.

அவ்வாறு எந்த ஒரு புதிய சட்டமும் பிரான்ஸ் அரசால் இயற்றப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

அவ்வாறு யாரேனும் பிரெஞ்சு ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி அணுகினால் அருகே உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்யலாம் என்றார் பரிதா.

Advertisements