கோட்டகுப்பம் குயீன் மேரி பள்ளி தாளாளருக்கு 5 ஆண்டு சிறை


செய்தி உதவி : தினமணி

கோட்டக்குப்பம் அருகே 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குயீன் மேரி பள்ளித் தாளாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் எம்ஜி ரோடு பகுதியைச் சேர்ந்த வணிகர் ஒருவரின் 7 வயது மகள், புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், கடந்தாண்டு 3ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மேலும், இந்த சிறுமி, இவரது வீட்டின் அருகே உள்ள குயீன் மேரி பள்ளியில் டியுஷன் படித்துள்ளார். கடந்த 21.6.15-ஆம் தேதி, வழக்கம் போல், டியூஷன் போனபோது, அப்பள்ளியின் தாளாளரான, புதுவை லாஸ்பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த சிவக்குமார்(50), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பழைய செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும். 

இது குறித்து, அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. புதன்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisements