திண்டிவனத்தில் ஜன.5இல் வேலைவாய்ப்பு முகாம்


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊராக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டிவனம், ஒலக்கூர், மயிலம், மரக்காணம், வானூர், கோட்டக்குப்பம் பகுதிகளை ஒருங்கிணைத்து இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளி வளாகத்தில் வரும் ஜன.5ஆம் தேதி நடைபெற உள்ள இந்த முகாமில், பல தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், படித்த, படிக்காத இளைஞர்கள் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.
இதற்கு கல்வித் தகுதியாக, 8ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையிலும், தொழிற் பயிற்சி (ஐடிஐ), டிப்ளமோ இன் பார்மசி, பொறியியல் படித்தவர்கள், 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.
அனைத்து கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், மார்பளவு புகைப்படங்கள் 2, ஆகியவற்றுடன் முகாமிற்கு வந்து பயன்பெறுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisements