​விழுப்புரத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு


 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தையும் அறிவிக்ககோரி, கோட்டக்குப்பம் பகுதியில் அனைத்து கட்சி சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்துள்ள தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை அறிவித்துள்ளது.
இதனிடையே தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தையும் அறிவிக்ககோரி, கோட்டக்குப்பத்தில் ஆளும் கட்சியைத் தவிர்த்த அனைத்து கட்சிகள் சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது .
இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்களுடைய கடைகளை அடைத்துள்ளனர்.

Advertisements