மழை வெள்ள பாதிப்பு – கோட்டக்குப்பத்தில் சாலை மறியல் 


சமிபத்தில் பெய்த பலத்த மழையால் பர்கத் நகர் ஜமியத் நகர்உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. பேரூராட்சி சார்பில் வெள்ள நிவாரணப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி கோட்டகுப்பம் மக்கள் இன்று காலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர்.
இதனால், மகாத்மா காந்தி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலிசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மழை நீரை வெளி யேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை யடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். இச்சம்பவம் காரண மாக சில மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


  
  
  
  
  

Advertisements