சபாஷ் – போர்கால நடவடிக்கையில் கோட்டகுப்பம் பேரூராட்சி


கோட்டகுப்பம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஹாஜி அப்துல் ஹமீத் மேற்பார்வையில் பர்கத் நகர்,ஜமியத் நகர், மரைகாயர் தோப்பு, சின்ன கோட்டகுப்பம் பகுதிகளில் போர்கால நடவடிகையாக வெள்ள நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மோட்டார் பம்புகள், ஜே.சி.பி./பொக்லைன், அதிவேக நீர் உறிஞ்சும் எந்திரங்கள் ஆகியவற்றுடன், தீயணைப்பு வாகனங்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல அரசியல் இயக்கம் மற்றும் தன்னார்வ இயக்கம் ஆகியோர்களுடன் பேரூராட்சி தலைவர் மற்றும் உறுபினர்கள் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அடிகடி வரும் தொடர் மழையால் நிவாரண பணிகளுக்கு பாதிப்பு வருகிறது. இதே போல போர்கால நடவடிக்கை நீடித்தால் நமதுரை சூழுந்துள்ள நீர் முழுவதுமாக வெளியேறும். பேரூராட்சி முன்னாள் தலைவர் ஹாஜி அப்துல் ஹமீத் அவர்களின் துரித செயல் பாராட்டுக்குரியது.  
  
  
  
  மக்களுக்கு மருத்துவ முகாம்

Advertisements