வெள்ள காடான பர்கத் நகர் : மக்கள் தவிப்பு


கோட்டக்குப்பத்தில் நேற்று பெய்த கனமழையால், பர்கத் நகர் வெள்ளக்காடானது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கோட்டக்குப்பத்தில் மூன்று நாட்களாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. நேற்று காலை, 8:30 மணி வரையில் 16 செ.மீ., மழையும், மாலை, 4:00 மணி நிலவரப்படி 4 செ.மீ., என, மொத்தம், 20 செ.மீ., அளவிற்கு ஒரே நாளில் மழை கொட்டி தீர்த்தது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழையாகும். கனமழையால் நகர வீதிகள் வெள்ளக்காடாகி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், முக்கிய வீதிகள் தண்ணீரில் முழுகியது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை.