மழை பாதிப்பில் உயிர் பலி 


பொம்மையார்பாளையம் ஆரோவில் சாலையைச் சேர்ந்தவர் மனோரஞ்சி (69). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீட்டின் சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்துள்ளது. இதில் தூங்கிக் கொண்டிருந்த மனோரஞ்சி அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த அதிர்ச்சியில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கோட்டக்குப்பம் புறா தோப்பு பகுதியில் கனமழை காரணமாக மின் கம்பி நேற்று அறுந்து கிடந்தது. அதே பகுதியை சேர்ந்த பானு, ஜெயா ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகள் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.

Advertisements