கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.


கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி சுற்றுலா வந்த தருமபுரி இளைஞர் உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், தடாகம் அருகே உள்ள ஒட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் ராகேஷ் (25). இவர், வியாழக்கிழமை சக நண்பர்களுடன் புதுவைக்கு சுற்றுலா வந்திருந்தார். பல்வேறு இடங்களுக்குச் சென்ற இவர்கள்bபெரியமுதலியார்சாவடி பகுதி கடற்கரைப் பகுதியில் குளித்துள்ளனர். அப்போது, அலையில் அடித்துச் செல்லப்பட்ட ராகேஷ் கரை திரும்பவில்லையாம்.
இதனையடுத்து, அங்கிருந்த மீனவர்கள் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சின்னமுதலியார்சாவடி கடற்கரைப் பகுதியில் ராகேஷின் சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை கைப்பற்றி கோட்டக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements