தண்ணீரில் மிதக்கும் கோட்டகுப்பம் – பரகத் நகர்


கோட்டக்குப்பத்தில் சமிபத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பரகத் நகர் முழுவதும் தண்ணிரில் மிதக்கிறது. தண்ணீர் போக வசதி ஏற்படுத்தாமல் நகர் ஊருவாகியவர்களின் நிலையால் இன்று பொதுமக்கள் பெரிதும் கஷ்டபடுகிறார்கள். மேலும் பழைய பட்டின பாதையில் மழை நீர் தேங்காமல் வெளியேறுகிறது. மழை நீர் சேகரிக்கும் எண்ணம் பொதுமக்களுக்கும் இல்லாததால் அணைத்து மழை நீரும் கடலில் கலக்கிறது. ஆண்டவனின் கருணையால் நமதூரில் தண்ணீர் கஷ்டம் இது வரை இல்லை, ஊரில் இருந்த குளம் குட்டை எல்லாம் விடுகளாக ஆகி விட்டது, இதே நிலை நீடித்தால் நாமும் ஒரு நாள் தண்ணீர்காக பல கிலோ மீட்டர் நடக்கும் நிலை வரும். அந்த நேரத்தில் கிழே இருக்கும் புகைப்படத்தை பார்த்து அறுதல் படலாம்.  
  
  
  
  
  

Advertisements