கோட்டகுப்பம் அருகே மர்ம கும்பல் பஸ் மீது கல்வீச்சு


 
சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு விரைவு பேருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென பேருந்தின் பின்புற கண்ணாடி மீது கல்வீசி விட்டு ஓடி விட்டனர். இதில் கண்ணாடி முற்றிலும் சேதமானது. இதுகுறித்து கடலூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்த பேருந்து டிரைவர் ராஜேஷ்ராவ் கோட்டக்குப்பம் போலீசில் நேற்று காலை புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுண்டானா பகுதியில் போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே நடந்துள்ள இந்த தாக்குதல் சம்பவம் மற்ற பேருந்து ஓட்டுநர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements