புதுச்சேரியில் 2 நாள் ஹலால் மாநாடு தொடங்கியது


IMG_4549

புதுச்சேரியில் 2 நாட்கள் நடைபெறும் ஹலால் மாநாடு தொடங்கியது. இம்மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா சிறப்புரை ஆற்றினார். புதுச்சேரியில் துபாய் சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 36 நாடுகள் பங்குபெறும் 2 நாட்கள் ஹலால் மாநாடு இன்று ஆனந்தா இன் ஓட்டலில் தொடங்கியது. உணவு பொருட்கள் முதல் மருத்துவ சேவை வரை அனைத்தும் தரமான உணவு, உயரிய சேவை என்பதை மையப்படுத்தி இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. குறிப்பாக இதன்மூலம் சுற்றுலாவை மேம்படுத்தவும், தரமான உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பினை அதிகரிக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர் பெருமக்கள் விவாதித்து வருகின்றனர். இந்த மாநாட்டில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து பேராசிரியர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுவுக்கு எதிராக பாடல் பாடிய மக்கள் கலை இலக்கிய பாடகர் கோவனை தமிழக அரசு கைது செய்திருப்பது கண்டித்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மோடி அரசு பதவியேற்றபின் நாட்டின் வளர்ச்சி என்று சொன்னார்கள் ஆனாலும் நாடுமுழுவதும் அனைவரது உள்ளத்திலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இறைச்சி விவகாரம் அமைந்து விட்டது. வெறுப்பு பேச்சுக்களை பேசுவதை இந்த அரசு ஊக்குவிப்பதால் தான் நாட்டின் உயர்ந்த விருதுகளை பெற்ற அறிஞர்கள் அதை திருப்பித் தந்து நாட்டில் மதநல்லிணக்கம் இருக்கின்றது என்பதை உணர்தியுள்ளார்கள். அவர்களை மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகின்றது. தமீமுள் அன்சாரி பொதுக்கூட்டம் நடத்ததான் நீதிமன்றம் அனுமதி அளித்தது. என் தலைமையிலான மனித நேயமக்கள் கட்சி செயல்படுவது குறித்து எந்த மாற்று கருத்தும் சொல்லவில்லை. தமிழக அரசு தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு 20 சதவீத போனஸ் வழங்கியுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisements