இந்தியாவின் முதல் ஹலால் மாநாடு புதுவையில் …….


 நமதூர் மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, பெருவாரியாக கலந்து கொண்டு சிறபிக்கவும் 
கடந்த 2014-ம் வருடம் சிங்கப்பூரில் முதல் முறையாக சர்வதேச ஹலால் மாநாடு நவம்பர் முதல் நாளன்று நடத்தப்பட்டது. இந்தியாவில் பல தொழில்களுக்கு உலகச் சந்தையில் வாய்ப்பை உருவாக்கும் விதமாக இந்த வருடம், புதுச்சேரியில் சர்வதேச ஹலால் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “அனுமதிக்கப்பட்டது” என்று பொருள்படும் ஹலால் சுத்தமான, ஆரோக்கியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைக் குறிக்கிறது.வருகின்ற நவம்பர் 1,2 ஆகிய தினங்களில் சர்வதேச ஹலால் மாநாடு பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது. ஆரோக்கியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களுக்கு “ஹலால்” சான்றிதழை ஹலால் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்கள் “ஹலால்” தரச்சான்றிதழைப் பெறும்போது 57 முஸ்லிம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு உதவியாக இருக்கும். இந்தோனேசியா போன்ற நாடுகளும் ”ஹலால்” சான்றிதழ் பெற்ற பொருள்களை மட்டுமே இறக்குமதி செய்வதால் உலகச் சந்தையைக் குறிவைக்கும் எல்லா பொருள்களுக்கும் ஹலால் தரச் சான்றிதழ் அவசியமாகிறது.தமிழ்நாட்டில் ஆச்சி மசாலா, சக்தி மசாலா, காளிமார்க் போன்ற ஏராளமான நிறுவனங்களும் சென்னையில் மெடிக்கல் டூரிஸத்தை நம்பியுள்ள மருத்துவ நிறுவனங்களும் “ஹலால்” சான்றிதழைப் பெற்றுள்ளார்கள். உலகமெங்குமிருந்து ஐம்பதுக்கும் மேலான நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச ஹலால் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

பாண்டிச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி துவக்கி வைக்கவுள்ள இந்தச் சர்வதேச மாநாடு, ஆனந்தா இன் நட்சத்திர விடுதியில் நடக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள தொழில்களும் இந்த மாநாட்டையொட்டி நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் +91 7299627060 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பேசலாம்.

Advertisements