ஒளிராத தெரு விளக்குகள் இருண்ட கோட்டகுப்பம் சாலைகள்


IMG_4092IMG_4095சென்னை மற்றும் புதுவையை ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக கோட்டகுப்பம் மகாத்மா காந்தி ரோடு அமைந்துள்ளது. தினசரி இந்த சாலையை ஆயிரக்கணக்கானோர் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

IMG_4093IMG_4094இந்த சாலையில் சுமார் 40 மின் விளக்கு கம்பம்கள் உள்ளது, இதில் 15 மட்டுமே வெளிச்சம் கொடுகிறது. மீதி உள்ள கம்பங்களில் ஒரு விளக்கு கூட எரியவில்லை. அதனால் இரவு 10 மணி வரை அந்த பகுதியில் உள்ள கடை வெளிச்சத்தில் மக்கள் சென்று வருகின்றனர். அதற்கு பிறகு அந்த பகுதி எப்போதுமே இருட்டாகவே காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகளுக்கும் பாத சாரிகளுக்கும் பெரும் அவதியாக உள்ளது. இதே நிலை தான் பழைய பட்டின பாதையில் 35 தெரு கம்பங்களில் சுமார் 10 இல் மின்விளக்கு எரிய வில்லை.                                                 
இந்த இருட்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே கோட்டகுப்பம் பேரூராட்சி அதிகாரிகளோ அல்லது மின்வாரிய அதிகரிகளோ, சம்பந்தப்பட்ட சாலையில் மின் விளக்குகளை எரிய செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக வலியுறுத்துகிறோம்.