கோட்டகுப்பம் – அந்த நாள் நியாபகம் – பகுதி 1


 

சின்னசிறு வயதில் மட்டுமே பார்த்த நமதுரின் எந்தக் காட்சிகளையும் கற்பனை பண்ண முயன்று, முடியாமல் நினைவுகளால் மட்டும் உணர்ந்திருக்கிறார்களா?

மீண்டும் பல வருடங்களின் பின் தாய்மண் திரும்பும்போது, அது தன் பழைய அடையாளங்களைத் முற்றிலும் துறந்து, அந்நியமாய் தெரியும்போது, என்ன தோன்றும்?

முதன் முதலாக சிறுவயதில் நீங்கள் நடைபயின்ற வீதியில் மீண்டும் நடந்து செல்கையில், பள்ளிக்கூடம், சின்னவயது நண்பர்களுடன் விளையாடி, உருண்டு, வீதி எல்லாம் பார்க்கும்போது, பழைய நினைவுகள் மெதுவாக மீட்டப்படுவதை உணர்ந்ததுண்டா?

ஒருவேளை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும்! நண்பர்களின், உறவுகளின் அனுபவங்களைச் சொல்லக் கேட்டிருக்கக்கூடும்! நானும் கூட கேட்டிருக்கிறேன்! ஆனால் அந்த அனுபவங்களை வார்த்தைகளால் விபரிப்பதென்பது சாத்தியமானதல்ல என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும்!

இந்த பழைய புகைபடம் கிடைக்க செய்த கோட்டகுப்பம் ஜனாப் .பஜுல் ரஹ்மான் குடும்பத்தினர்களுக்கு நன்றி…

 

 

IMG_3856

பள்ளிவாசல் தெருவில் மாட்டு வண்டியோட சிறுவர்கள் விளையாடும் பழைய படம், இந்த படத்தில் இருக்கும் பலருக்கு பாடமாக தெரியும்

IMG_3857

 

அன்று முதல் இன்று வரை பழமை மாறாமல் இருக்கும் அஞ்சுமன் நூலக கட்டிடம்

 

 

IMG_3858

முன்னொரு காலத்தில் நமதூர் குளத்தில் பொதுமக்கள் குளித்து வந்தனர் . அந்த குளங்கள் அவ்வளவு சுத்தமாகவும் முழு பாதுகாப்பு வசதி கொண்டதாகவும் இருக்கும். காலம் மாறியது. குளங்களின் சுத்தமும் போனது; வரண்டும் போனது. தண்ணீர் ததும்பிய அந்த பழைய குளம் நமதுருக்கு மீண்டும் கிடைக்காதா …..

Advertisements