சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


சிறுபான்மையின கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டு வருகிறது. இதை பெறு வதற்கு, புதிய இணையதள முகவரியான http://www.scholarships.gov.in என்ற முகவரியில், புதிதாக உதவி தொகைபெறும் நபர்கள் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரையிலும் ஏற்கெனவே கல்வி உதவித்தொகை பெறும் நபர்கள் புதுப்பிப்பதற்கு நவம்பர் மாதம் 15-ம் தேதி வரையிலும் பதிவு செய்யலாம்.

மேலும், 2015-16ம் ஆண்டில் 2,279 நபர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க அரசு இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பெற மாண வர்கள், கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதியுடைய மாணவர்கள், மேற்கூறிய இணையதள முகவரி யில் விண்ணப்பத்ததைப் பதிவி றக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், மதிப்பெண் சான்றிதழ், மத சான்றிதழ், வருமானச் சான்று, கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிடச் சான்று, வங்கி கணக்கு எண் ஆகியவற்றின் நகல்களை இணைத்து, மேற்கூறிய நாட்களுக்குள் மாணவர்கள் பயிலும் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை மாணவ- மாணவியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு, முழுக்கல்வி கட்டணங்களும் (திரும்ப பெறும் கட்டணங்களைத் தவிர்த்து) வழங்கப்படும்.

 

Advertisements