கிஸ்வா அமைப்பு மூலம் ஜக்காத் பொருட்கள் விநியோகம்


IMG_1829

 

கோட்டகுப்பம் கிஸ்வா அமைப்பு மூலம் திரட்டிய ஜக்காத் பணத்தை கொண்டு உணவு பொருட்கள் ஏழை பயனாளிகளுக்கு பகிர்ந்து அளிக்க பட்டது, சுமார் 400 குடும்பங்கள் இதன் முலம் பயன் பெற்றனர்.

 

நமதூரில் ஜக்காத் கடமை உள்ள நடுத்தர மக்கள் சில நூரூ ரூபாய்க்கு கைலி வாங்கி கொடுத்தும் , மேலும் ஊரில் உள்ள செல்வந்தர்களும் தங்களது சொத்து மதிப்பு பிரகாரம் ஜக்காத் கொடுக்காமல் தமது கடமையை முடித்து கொள்கிறார்கள். நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளில் சிலர் தங்க நகைகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஜக்காத் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் பின்வரும் திருமறை வசனங்களையும் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையையும் பற்றி சற்று சிந்தித்து அதன்படி செயல்பட கடமைப் பட்டுள்ளார்கள். அல்லாஹ் கூறுகிறான்:

¨யார் தங்கத்தை (அதற்குரிய பொருளாதாரத்தை)யும் வெள்ளியை (அதன் மதிப்பீடு பொருளை)யும் சேகரித்து வைத்து அல்லாஹ்வின் வழியில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடின வேதனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்க. மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக்கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (ஜகாத் கொடுக்காது) நீங்கள் சேகரித்து வைத்ததை இதோ சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்” அல்-குர்ஆன் (9: 34 & 35). 

கிஸ்வா அமைப்புக்கு தங்களது ஜகாத் தொகைகளை கொடுத்துதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், ஜகாத் தொகைகளை வசூல் செய்த அனைத்து அமைப்பினர்களுக்கும் அவர்களின் பொருளாதாரத்தை மென்மேலும் பெருக எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் கோட்டகுப்பம் மற்றும் வெளியூர் சகோகதரர்கள் அனைவரும் கிஸ்வா அமைப்பிடம் உங்களது ஜகாத்தை கொடுத்தால் கோட்டகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களிலும் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க முயற்சி செய்வோம்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் அநேகமான இடங்களில் எல்லாம் கூடவே ஜக்காத்தையும் வலியுறுத்திக் கூறுவதை நாம் காண முடிகிறது. அந்த அளவிற்கு இன்றியமையாத கடமையாக இருக்கும் ஜக்காத் விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

 

 

 

Advertisements