ஊர்க்காவல் படையில் பணிபுரிய கோட்டகுப்பம் மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு


கடலோர ஊர்க்காவல் படையில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் கடலோர ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பம் உள்ள கடலோர குடும்பத்தை சேர்ந்த ஆண் நபர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். 20 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும், நல்ல நடத்தை உள்ளவராகவும், உடற் தகுதியுடையவராகவும் இருக்க வேண்டும், உயரம் 168 செ.மீட்டரும், மார்பளவு 80 செ.மீட்டரும் (சாதாரண நிலை), விரிவடையும்போது 85 செ.மீட்டரும், குறைந்தது 5 செ.மீ. மார்பு விரிதல் வேண்டும். தேசிய மாணவர் படை, பாரத சாரணர் இயக்கம், நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவற்றில் பணிபுரிந்து சான்று வைத்திருந்தால் அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

அரசுத்துறை, பொதுத்துறை, தனியார் துறை ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். ஊர்க்காவல் படையில் பணிபுரிவதற்கு ஒரு சேவை மனப்பான்மை வேண்டும். எனவே மனுதாரர் சேவை மனப்பான்மை உள்ளவராக இருத்தல் வேண்டும். குடும்ப அட்டை நகலுடன் புகைப்படம் ஒன்று இணைக்க வேண்டும். மாத வருமானம் ரூ.10 ஆயிரம் உள்ளவர் மட்டும்.

மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மார்பளவு புகைப்படத்துடன் சுய விவரங்கள் அடங்கிய சுய விலாசமிட்ட ரூ.5 தபால் வில்லை ஒட்டப்பட்ட உறையுடன் வருகிற 18–ந் தேதிக்குள் விருப்ப மனுவை ஆய்வாளர், புதுக்குப்பம் கடலோர காவல் நிலையம், கோட்டக்குப்பம் உட்கோட்டம் என்ற விலாசமிட்டு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

 

Advertisements