புதுவையின் பிரமாண்டம் – பாத்திமாஸ் சூப்பர் ஸ்டோர் திறப்பு


 

  

 

 

 

 

புதுவை புஸ்ஸி வீதியில் சரஸ்வதி திருமண நிலையம் அருகில் பாத்திமாஸ் சூப்பர் ஸ்டோர் என்ற பல்பொருள் அங்காடி புதிதாக அமைந்துள்ளது. இதன் திறப்பு விழா இன்று 24/06/2015 நடைபெற்றது. விழாவுக்கு அரசு கொறடா G .நேரு M.L.A முன்னிலையில், புதுவை மக்கள் முதல்வர் மாண்புமிகு திரு ந. ரங்கசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள். புதுவை வணிகர் சங்க தலைவர் M. சிவசங்கர் முதல் விற்பனையை பெற்றுகொன்டர்கள். மேலும் டவுன் காஜி அல்ஹாஜ் முஹம்மத் செய்யது பாகவி துவா செய்தார்கள். சிறப்பு விருந்தினராக வக்ப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான், முன்னாள் M.L.A புஸ்ஸி N.ஆனந்த், முன்னாள் M.L.A. V .அனிபால் கென்னடி கலந்து கொண்டு சிறப்பித்தனர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள்  அனைவரையும் வரவேற்றனர். மேலும் இந்த திறப்பு விழா நிகழ்விற்கு கோட்டக்குப்பம் மற்றும் புதுவை உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் முக்கியஸ்தர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

பாத்திமாஸ் சூப்பர் ஸ்டோர் குழுமத்தின் நிறுவனத்தினருடைய தொழில் செழிக்க கோட்டகுப்பம் இனையதளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Advertisements