கோட்டக்குப்பத்தில் குரங்கு அட்டகாசம் அதிகரிப்பு


IMG_1625

 

 

குற்றாலத்தில் உள்ளது போல நமதூரில் குரங்குகள் அதிகமாக உள்ளது தாங்கள் அறிந்ததே ! சாமிப காலமாக இதன் எண்ணிக்கை அதிகரித்து மக்களை பயம் கொள்ள வைக்கிறது.கோட்டகுப்பம் ஊருக்குள் நுழையும் குரங்குகள் மளிகைக் கடைகளில் உள்ள முட்டை, பால் பாக்கெட், பிஸ்கட் போன்றவற்றையும், வீடுகளில் புகுந்து அரிசி, பருப்பு மற்றும் சாப்பாடு போன்றவற்றையும் அள்ளிச் சென்று விடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.சில விடுகளில் சமையலறை வரை வந்து சமைத்து வைத்த உணவுகளை எடுத்து சென்று விடுகிறது. மேலும் பெண்கள் விட்டு மாடியில் எதுவும் காயப்போட முடியாமல் உள்ளனர் . எது போட்டாலும் அதை நாசமாக்கி விட்டு போய்விடுகிறது. இந்த குரங்கினால் பெண்களும் சிறுவர்களும் மிகவும் பயபடுகிறார்கள்.

அதேபோல், ஓட்டு வீடுகளின் மேல் அமர்ந்து ஓடுகளை வீசி எறிவதாகவும், மின் விளக்குகளை உடைப்பதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

அட்டகாசம் செய்யும் குரங்குகளை விரைந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்து பிடிக்க கோட்டகுப்பம் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் சார்பில் கோரிக்கை விடுகிறோம்.

Advertisements