புதுச்சேரி அருகே ஒரு பொக்கிஷம்


த மு மு க பொது செயலாளர் ப .அப்துல் சமது நேற்று ( 09-06-15) நமதூர் அஞ்சுமன் நுஸ்ரதுல் இஸ்லாம் நூலகத்துக்கு வருகை தந்தார்கள், மேலும் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை கிழே விவரிக்கிறார்.

IMG_1536

நேற்று( 09-06-15) மியான்மார் முஸ்லிம்கள் படுகொலையை கண்டித்து தமுமுக நடத்திய ஆர்பாட்டத்தில் பங்குகொள்ள கோட்டக்குப்பம் சென்றிருந்தேன். ஆர்பாட்டம் முடிந்து புறப்பட்டபோது “நூலகம் ஒன்றை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்திருக்கிறோம், நீங்கள் அங்கு வந்து செல்லவேண்டும் ” என்று மு.மாவட்டச்செயலாளர் அபூபக்கர் அஜ்மல் அழைத்தார். நூலகம் என்றாலே ஒரு ஈர்ப்பு என் மனதில் எப்போதும் உண்டு “சரி போகலாம்” என சென்றேன். என்னுடன் விழுப்புரம் (வ) மாவட்டச்செயலாளர் முஸ்தாக்தீன்,துணை செயலாளர் முபீன்,மு.மாவட்ட செயலாளர் அபூபக்கர் அஜ்மல் மற்றும் நகர நிர்வாகிகள் உடன் வந்தனர்.

நூலகச் செயலாளர் சகோதரர் லியாகத் அலி வரவேற்றார், உள்ளே நுழைந்தால்,சாதாரண நூலகம் அல்ல அது , ” வரலாற்று பொக்கிஷம்” 1926, ல் துவக்கப்பட்டு “89” ஆண்டுகளை நிறைவு செய்துள்ள “அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம்” பொது நூலகம் & இஸ்லாமிய அறிவு மையம், தான் அது.

வரலாற்று நூல்கள்,இஸ்லாம், இலக்கியம், கவிதை நூல்கள் மட்டுமல்லாமல் ” தாருல் இஸ்லாம்” ” நூருல் இஸ்லாம் ” மறுமலர்ச்சி” ” முஸ்லிம் முரசு” உணர்வு’ “மக்கள் உரிமை” என சமுதாய இதழ்களின் பாதுகாப்பு பெட்டகமாக இந்த நூலகம் திகழ்கிறது.

தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கடந்த நூறாண்டு வரலாற்றை ஆய்வு செய்யவும், வரலாற்று நூல்களை உருவாக்கவும் ஆர்வமுள்ளவர்களுக்கு புதுச்சேரி அருகே உள்ள பொக்கிசமான கோட்டகுப்பம் நூலகம் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்நூலகத்தை செம்மைபடுத்தி மக்கள் பயன்பாட்டை அதிகரிக்கவும்,அங்குள்ள மிகப் பழமையான நூல்களை பாதுகாக்கவும், புதிய உறுப்பினர்களை கொண்ட நூலக நிர்வாக குழு உருவாக்கப் பட்டிருப்பதாகவும் , பல்வேறு திட்டமிடுதலுடன் செயல்பட தொடங்கிவுள்ளதாக நூலக செயலாளர் சகோ : லியாகத் அலி தெரிவித்தார்.

 

விரைவில் இன்ஷா அல்லாஹ் ( இறைவன் நாடினால்) சில நாட்கள் இந்நூலகத்தில் முகாமிட வேண்டும் என்ற எண்ணத்தோடு விடைபெற்றேன். 
      

Advertisements